'புதிய ஆரம்ப நிறுவனங்கள் இந்தியாவின் முதுகெலும்பு'

'புதிய ஆரம்ப நிறுவனங்கள் இந்தியாவின் முதுகெலும்பு'

1 mins read
23b5ccb4-5224-40a5-83c7-a6615c27daae
-

புது­டெல்லி: புதி­தா­கத் தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­கள் (startup companies) புதிய இந்­தி­யா­வின் முது­கெ­லும்­பாக மாறி­யுள்­ளன என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார். புதி­தா­கத் தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­க­ளு­டன் நேற்று காணொளி மூலம் அவர் கலந்­து­ரை­யா­டி­னார்.

அப்­போது அனைத்­து­வி­த­மான புதி­தா­கத் தொழில் தொடங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு அவர் வாழ்த்­துத் தெரி­வித்­தார்.

'ஸ்டார்ட் அப்' நிறு­வ­னங்­க­ளுக்­கான கொள்­கை­களில் அரசு பெரிய அள­வில் மாற்­றத்தை கொண்டு வந்­துள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார். "இனி ஆண்­டு­தோ­றும் ஜன­வரி 16ஆம் தேதி தேசிய புதி தாகத் தொழில் தொடங்­கும் நிறுவ னங்­க­ளின் தின­மா­கக் கடை பிடிக்­கப்­படும். மக்­க­ளின் ஆற்­றலை தேசம் அங்­கீ­க­ரித்­துள்­ளது. இந்­தியா 100ஆண்டு சுதந்­திர தினத் தைக் கொண்­டா­டும் வேளை­யில் புதிய நிறு­வ­னங்­கள் முக்­கிய பங்கு வகிக்­கும். நாட்­டின் புதிய கண்டு பிடிப்­பா­ளர்­கள், அனைத்­து­லக அள­வில் தேசத்தை மிளிர செய்­கின்­ற­னர். இந்த தசாப்­தம் இந்­தி­யா­வின் தசாப்­த­மாக மாறி­யுள்­ளது," என்­றார் பிர­த­மர்.