தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்து

தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்து

1 mins read
84357535-88b8-4c98-894a-bf2eb59c2d16
-

புது­டெல்லி: இலங்கை கடற்­ப­டை­யால் கைது செய்­யப்­பட்­டுள்ள தமி­ழக மீன­வர்­களை உட­ன­டி­யாக விடு­விக்க வேண்­டும் என மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்கர் (படம்) இலங்கை அர­சி­டம் வலியுறுத்தி உள்­ளார்.

இலங்கை நிதி­ய­மைச்­சர் பசில் ராஜ­பக்சே நேற்று முன்­தினம் அமைச்­சர் ஜெய்­சங்­க­ரு­டன் காணொளி வசதி மூலம் பேசி­னார். அப்­போது கடும் நிதி நெருக்­க­டி­யில் சிக்­கி­யுள்ள இலங்­கைக்கு, இந்­தியா கடனு­தவி அளிக்க வேண்­டும் என்று அந்­நாடு கோரிக்கை விடுத்தது.

இதை­ய­டுத்து தமி­ழக மீன­வர்­களை மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யில் விடு­விக்க வேண்­டும் என இந்­தி­யத் தரப்­பில் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

இது குறித்து தமது டுவிட்­டர் பக்­கத்­தில் பதி­விட்ட அமைச்­சர் ஜெய்­சங்­கர், அண்­மைய பேச்­சு­வார்த்­தை­யின் மூலம் இலங்­கை­யின் உறு­தி­யான, நம்­ப­க­மான கூட்­டா­ளி­யாக இந்­தியா இருக்­கும் என்­பது மீண்­டும் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

இலங்கைக்கு அத்தியாவசியப் பொருள்களுக்காக ஒரு பில்லியன் டாலரும் எரிபொருள் வாங்குவதற்கு ஐநூறு மில்லியன் டாலரும் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

"பொருளாதார நெருக்கடியில் தவித்து வரும் இலங்கைக்கு உதவ, இந்தியா தனது அனைத்துலகக் கூட்டாளிகளையும் வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டது.