டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத் தில் தேர்தல் நடைபெறும் வேளை யில் அம்மாநிலத்தில் ஆட்சி நடத்தும் பாஜக அமைச்சரவையில் இருந்து அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் நீக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் இந்த திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுபது தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் சட்ட சபைக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளன. இம்மாநிலத்தில் பாஜக, காங் கிரஸ் உள்ளிட்ட பிரதானக் கட்சிகள் போட்டியிடுகின்றன.
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள பாஜகவும் ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் தீவிர முயற்சி களை எடுத்து வருகின்றன.
திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் களமிறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் புஷ்கர் சிங் தமி முதல்வராக இருந்து வருகிறார். அவரது அமைச் சரவையில் ஹரக் சிங் ராவத் அமைச்சராக இருந்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஹரக் சிங் 2016ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்ததால் அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஹரக் சிங் ராவத் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பாஜக வட்டாரத்தில் தகவல் பரவியது.
இதையடுத்து அமைச்சர், கட்சி யின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஹரக் சிங் ராவத் நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப் படுகிறது. தேர்தல் சமயத்தில் பாஜக அமைச்சர் நீக்கப்பட்டது அம்மாநில அரசியல் புதிய சலசலப்பை ஏற் படுத்தியுள்ளது.

