மருமகனுக்கு 365 வகையான உணவுகளுடன் விருந்து

மருமகனுக்கு 365 வகையான உணவுகளுடன் விருந்து

2 mins read
aa76ee12-5076-4410-89d1-3d5b826bfb09
சங்கராந்தியை முன்னிட்டு வருங்கால மருமகனுக்கு 365 வகையான உணவுகளுடன் விருந்து அளித்து பெண் வீட்டார் அவரை திக்கு முக்காட வைத்து உள்ளனர். -

அமராவதி: திருமணம் ஆகவுள்ள தம்முடைய பேத்திக்கும் அவருடைய வருங்கால கணவருக்கும் 365 வகையான உணவு வகைகளை சமைத்து, அப்பெண்ணின் தாத்தா பாட்டி திக்குமுக்காட வைத்த நிகழ்வு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், கோதாவரியில் நடந்துள்ளது.

நரசாபுரம் என்ற பகுதியை சேர்ந்த குந்தவிக்கும் சாய் கிருஷ்ணா என்பவருக்கும் திரு மணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் விரைவில் திரு மணம் நடைபெறவுள்ள வேளையில் தம்முடைய பேத்திக்கும் அவருடைய வருங்கால கணவருக்கும் சங்க ராந்தியை முன்னிட்டு பெண் வீட்டார் தடபுடலாக விருந்து ஏற்பாடு செய்தனர்.

அதன்படி, விதவிதமான காய் கறிகள், பழங்கள், இனிப்பு வகை களைத் தயார் செய்யும் பெரும் பணி இடம்பெற்றது. முப்பது வகை யான குழம்பு, சாதம், பிரியாணி, பாரம்பரிய கோதாவரி இனிப்புகள் மாப்பிள்ளைக்கு வழங்கப்பட்டன.

மேலும், 100 வகையான இனிப்புகள், 75 கார வகைகள், 15 ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் கேக்குகள் என மொத்தம் 365 வகையான உணவுகளை ஏற்பாடு செய்து பெண் வீட்டார் அசத்தி உள்ளனர். திரு­மண வாழ்க்­கை­யைத் தொடங்­கு­வ­தற்கு முன்பே இந்­தத் தட­பு­டல் விருந்­தைக் கண்டு உள்ள குந்­தவி-சாய் கிருஷ்ணா தம்­பதி அசந்துபோய்­விட்­ட­னர்.

இது குறித்து பேசிய பெண் வீட்­டார், "வருங்­கால மரு­ம­கன்­மீது எங்­க­ளது அன்­பைக் காட்ட, ஓர் ஆண்­டில் 365 நாள்­க­ளைக் கணக்­கிட்டு அதற்­கேற்ப 365 வகை­யான உண­வு­களை ஏற்­பாடு செய்­தோம்," என்று தெரி­வித்­த­னர்.

இந்­தத் தட­பு­ட­லான விருந்­தைக் காட்­டும் புகைப்­ப­டங்­கள் இணை­யத்­தில் தீயாய் பரவி வரு­கின்றன.