புதுடெல்லி: இவ்வாண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு இட மில்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. கிருமிப் பரவல் காரணமாக இவ்வாண்டு 12 மாநிலங்களின் அணி வகுப்பு வாகனங்கள் மட்டுமே பங்கேற்கின்றன. இவற்றில் தமிழகம் சார்பிலான அலங் கார ஊர்தி தேர்வு செய்யப் படவில்லை. தமிழ்நாட்டில் இருந்து விடுதலை போராட்ட வீரர்களான வேலுநாச்சியார், வ.உ. சிதம்பரனார், பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையிலான அலங்கார ஊர்தி அமைக்கப் படும் என மத்திய அரசிடம் தமிழக அரசு தெரிவித்தது. இருப்பினும் தமிழ்நாடு சார்பி லான அந்த அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படவில்லை. கேரளா உட்பட தென்னிந்தி யாவில் வேறு எந்த மாநில மும் அலங்கார ஊர்திக்கு தேர்வாகவில்லை. ஆனால், பாஜக ஆளும் கர்நாடகா மாநிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஊர்திக்கு இடமில்லை
1 mins read
-

