1.47 லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்

1.47 லட்சம் குழந்தைகள் பெற்றோரை இழந்தனர்

1 mins read
27e292f0-b414-4e3e-b7bf-c29274adaaa8
-

புது­டெல்லி: கொரோனா காலத்­தில் சுமார் 1.47 லட்­சம் குழந்­தை­கள் பெற்­றோரை இழந்­து­விட்­ட­தாக அதிர்ச்சி தக­வல் வெளி­யாகி­ உள்­ளது. கொரோனா பாதிப்பு, பிற நோய்­க­ளால் 2020ஆம் ஆண்டு ஏப்­ரல் மாத்­தி­லி­ருந்து 1.47 லட்­சத்­துக்­கும் அதி­க­மான குழந்­தை­கள் பெற்­றோரை இழந்­துள்­ள­னர்.

கிரு­மித்­தொற்­றால் பெற்­றோரை இழந்த குழந்­தை­க­ளின் பாது­காப்பு குறித்து உச்ச நீதி­மன்­றம் தானாக முன்­வந்து விசா­ரணை நடத்தி வரு­கிறது. இந்த நிலை­யில் தேசிய குழந்­தை­கள் உரி­மை­கள் பாது­காப்பு ஆணை­யம், உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்­துள்ள மனு­வில் நாட்­டில் கொரோனா தொற்று 2020 மார்ச் மாதம் பர­வத் தொடங்­கி­ய­தா­க­வும் 2020 ஏப்­ரல் முதல் தற்­போது வரை கொரோனா தொற்று உள்­ளிட்ட பல்­வேறு நோய்­க­ளால் 1.47 லட்­சத்­துக்­கும் அதி­க­மான குழந்­தை­கள், தாயையோ, தந்­தை­யையோ அல்­லது இரு­வ­ரை­யுமோ இழந்­துள்­ள­னர் என்­றும் மனு­வில் தெரி­விக்­கப்­பட்­டது.

இதில் 76,508 பேர் சிறு­வர்­கள். 70,980 பேர் சிறு­மி­யர். நான்கு பேர் மூன்­றாம் பாலி­னத்­த­வர்­கள்.

ஒடிசா மாநி­லத்­தில் அதி­க­பட்­ச­மாக 24,405 குழந்­தை­கள் பெற்­றோரை இழந்து உள்­ள­னர்.

மகா­ராஷ்­டி­ரா­வில் 19,623 குழந்­தை­களும் குஜ­ராத்­தில் 14,770 குழந்­தை­களும் தமி­ழ­கத்­தில் 11,014 பேரும் பெற்­றோ­ரில் ஒரு­வ­ரையோ அல்­லது இரு­வ­ரையோ இழந்­துள்­ள­னர் என்று அந்த மனு தெரி­விக்­கிறது.