இறைச்சி வாங்க சென்றவருக்கு அடித்தது யோகம்

இறைச்சி வாங்க சென்றவருக்கு அடித்தது யோகம்

1 mins read
9bf65db3-7806-4f7f-94db-e2dd52bd6e67
தாம் வாங்கிய லாட்டரிச் சீட்டுடன் சதானந்தன். படம்: தமிழக ஊடகம் -

சாயம் பூசும் தொழிலாளி ஒருவருக்கு லாட்டரிச் சீட்டு வாங்கிய சில மணி நேரத்தில் முதல் பரிசாக ரூ.12 கோடி கிடைத்துள்ள நிகழ்வு இந்தியாவின் கேரள மாநிலம், கோட்டயத்தில் இடம்பெற்றது.

சதானந்தன் என்ற அந்த ஆடவர் கடந்த 50 ஆண்டுகளாக கட்டடங்களுக்கு சாயம் பூசும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிமை இறைச்சி வாங்க சென்றவர், சந்தையில் லாட்டரிச் சீட்டு விற்கப்படுவதைப் பார்த்து, தாமும் ஒரு சீட்டை வாங்கினார். அந்தச் சீட்டுக்குதான் முதல் பரிசு விழுந்தது.

"சந்தையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரத்தில் குலுக்கல் நடைபெற்றது. அதன் முடிவு விரைவில் வெளியானது. முதல் பரிசு எனக்குக் கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி.

"பரிசுத்தொகையைக் கொண்டு எனது இரண்டு மகன்களின் வாழ்க்கையை மேம்படுத்துவேன்," என்று செய்தியாளர்களிடம் சதானந்தன் கூறினார்.