மாண்டோரில் 68% தடுப்பூசி போடாதவர்கள்: புதிய தகவல்

மாண்டோரில் 68% தடுப்பூசி போடாதவர்கள்: புதிய தகவல்

1 mins read
afd101ae-6dd9-43c3-b8e4-d0b244a12d83
-

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் கடந்த 48 நாட்­க­ளாக கொவிட்-19 தொற்று கார­ண­மாக மாண்­ட­வர்­களில் 68 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்ற விவ­ரத்தை அந்த மாநி­லத்­தின் மருத்­து­வக் கல்வி மற்­றும் மருந்­துத் துறை தெரி­வித்து உள்­ளது. எஞ்­சிய 32 விழுக்­காட்­டி­ன­ரில் சிலர் ஒரு தடுப்­பூ­சி­யும் வேறு சிலர் இரு தடுப்­பூ­சி­க­ளை­யும் போட்­டுக் கொண்­ட­வர்­கள் என்­றும் அது குறிப்­பிட்­டது. ஒட்­டு­மொத்­த­மாக, மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் கடந்த ஆண்டு டிசம்­பர் 1 முதல் நேற்று முன்­தி­னம் (ஜன­வரி 17) வரை 807 பேர் கொரோனா தொற்று கார­ண­மாக மாண்­டு­விட்­ட­னர். தனி­யார் மற்­றும் அரசு மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்ட நோயா­ளி­கள் இவர்­கள். அரசு மருத்­து­வ­ம­னை­களில் உயி­ரி­ழந்த 151 பேரில் 102 பேர் ஒரு கொரோனா தடுப்­பூ­சி­யை­யும் போட்­டுக்­கொள்­ள­வில்லை. 49 பேர் ஒரு தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­ட­னர்.

இந்த நில­வ­ரத்தை விளக்­கிய மாநில கொவிட்-19 பணிக்­கு­ழு­வின் தலை­வர் டாக்­டர் சஞ்­சய் ஓக், தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் இருப்­பது ஆபத்­துக்­கு­ரி­யது என்­பதை இந்த மர­ணங்­கள் உணர்த்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் நேற்­றுக் காலை நில­வ­ரப்­படி ஒரே­நா­ளில் 682 பேருக்கு ஓமிக்­ரான் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. இவர்­க­ளை­யும் சேர்த்து ஓமிக்­ரான் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை 8,891 ஆக அதி­க­ரித்­தது. மேலும், கொரோனா தொற்று 2 லட்­சத்து 38 ஆயி­ரம் பேருக்கு உறுதி செய்­யப்­பட்­டது. திங்­கட்­கி­ழமை பதி­வான எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் இது சுமார் 20,000 குறைவு என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.