இந்தியாவில் முதலீடு செய்ய சரியான தருணம் இது: மோடி

இந்தியாவில் முதலீடு செய்ய சரியான தருணம் இது: மோடி

1 mins read
4d6a3cbb-97d7-4a60-8317-aa51be1e0567
-

புது­டெல்லி: சுவிட்சர்­லாந்­தின் டாவோஸ் நக­ரில் நடை­பெ­றும் உல­கப் பொரு­ளா­தார கூட்­ட­மைப்­பின் மாநாட்­டில் மெய்­நி­கர் வாயி­லா­கக் கலந்­து­கொண்டு பிர­த­மர் மோடி பேசி­னார். தொழில் செய்­வ­தற்­குத் தடை­யாக இருந்­தவை தனது ஆட்­சி­யில் நீக்­கப்­பட்­டுள்­ளதை அப்­போது சுட்­டிக்­காட்­டிய அவர், நிறு­வன வரி­கள் குறைக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறி­னார்.

மேலும், அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்கு இந்­தி­யா­வில் நிலை­யான, நம்­ப­க­மான வளர்ச்சி இருக்­கும் என்­ப­தால் முத­லீடு செய்­வ­தற்கு இதுவே தகுந்த நேரம் என உல­கத் தலை­வர்­க­ளுக்கு அவர் அழைப்பு விடுத்­தார்.

"உல­கின் மிக­வும் கவர்ச்­சி­க­ர­மான முத­லீட்டு இட­மாக இந்­தி­யாவை உரு­வாக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. இந்­திய இளை­ஞர்­கள் தொழில் தொடங்­கும் ஆர்­வத்­தில் உள்­ள­னர். புதிய தொழில்­நுட்­பத்தை உரு­வாக்­க­வும் அதை ஏற்­றுக்­கொள்­ள­வும் அவர்­கள் தயா­ராக உள்­ள­னர்.

"'கிரிப்டோ கரன்சி' எனப்­படும் மெய்­நி­கர் பணம் தொடர்­பான சவால்­களை எதிர்­கொள்ள எல்லா நாடு­களும் ஒருங்­கி­ணைந்து செய­லாற்ற வேண்­டும்," என மோடி தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

'டாவோஸ் செயல்­திட்ட மாநாடு' என்­னும் இந்த மாநாடு ஐந்து நாள்­க­ளுக்கு நடத்­தப்­ப­டு­கிறது.