வேளாண் சங்கம்: தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை

வேளாண் சங்கம்: தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை

1 mins read
2da44ee7-7b3c-42b0-b15f-d736f0251659
-

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல்களில் எந்த ஒரு கட்சிக்கும் நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை என்று இந்திய வேளாண் சங்கத் தலைவர் ராகேஷ் டிகைத் கூறியுள்ளார். விவசாயிகள் கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, ராகேஷ் டிகைத், விவசாயிகள் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் சமாஜ்வாதி கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டினார். அதன் பின்னர் அவர் பாஜகவின் சஞ்சீவ் பல்யாணை சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் அவர், பழைய வேண்டுகோளை மீட்டுக் கொள்வதாகவும் தேர்தலில் எந்தக் கட்சியையும் வேளாண் சங்கம் ஆதரிக்கவில்லை என்றும் கூறினார்.

விவசாயிகள் கூட்டத்தில், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் கைதான பல்வேறு விவசாயிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இது தவிர குறைந்தபட்ச ஆதார விலை பற்றி அரசு இன்னும் ஏதும் தெரிவிக்கவில்லை. 13 மாத கால போராட்டத்தை அடுத்தே அரசு மூன்று வேளாண் சட்டங்களை மீட்டுக்கொண்டது. இது எங்களுக்குக் கிடைத்த இந்த வெற்றிதான் அரசியல் கட்சிகளின் கவனத்தை எங்கள் பக்கம் ஈர்த்துள்ளது என்றார்.