லக்னோ: பாஜகவிலிருந்து பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பல தலைவர்கள் சமாஜ்வாடி கட்சியில் இணைந்த நிலையில், முலாயம் சிங்கின் மருமகள் ஆளும் கட்சியில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகிலேஷ் யாதவின் தம்பி மனைவி அபர்ணா பாஜகவில் நேற்று இணைந்தார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்துக்கு வருகை தந்த அபர்ணா யாதவ் உ.பி. துணை முதல்வர் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். (படம்)
உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு இது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் இளைய மகன் பிரதிக் யாதவின் மகள்தான் அபர்ணா.
பாஜகவிலிருந்து தலைவர்கள் பலர் சமாஜ்வாடி கட்சியில் இணைந்த நிலையில், முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா பாஜகவில் சேர்ந்துள்ளது அக்கட்சிக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
சமாஜ்வாடி கட்சியிலிருந்து விலகி அபர்ணா பாஜகவில் இணைவார் என பல நாள்களாகவே அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவந்தது.
முன்னதாக, ஆளும் பாஜகவின் முக்கிய அமைச்சர்களான சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி, தாரா சிங் செளகான் ஆகியோர் சமாஜ்வாடி கட்சியில் அண்மையில் இணைந்தனர். அதேபோல், அமைச்சர்களைத் தொடர்ந்து வினய் சக்கியா, ரோஷன் லால் வர்மா, முகேஷ் வர்மா, பகவதி சாகர் ஆகிய பாஜக எம்எல்ஏக்களும் சமாஜ்வாடி கட்சியில் சேர்ந்தனர்.
உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல் இந்தியாவே உற்று நோக்கும் தேர்தல் களமாக மாறியிருக்கிறது.
இத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முனைப்போடு பாஜக செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு கடுமையான சவாலாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி இருக்கிறது.

