ஐந்து முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்

ஐந்து முறை தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்

1 mins read
a0f4cb8a-2a2e-4022-89cf-8f027b02291c
-

பாட்னா: பீகார் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர், ஐந்து முறை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார்.

இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விபாகுமாரி சிங் என்ற அந்த மருத்துவர், அரசு அனுமதித்துள்ள மூன்று தடுப்பூசிகளையும் முறையாகப் போட்டுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனது பான் கார்டு உள்ளிட்ட தகவல்களைக் கொண்டு யாரோ மற்ற இரண்டு தடுப்பூசிகளையும் போட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் விபா குமாரி சிங் கூறி உள்ளார்.

முன்னதாக பீகாரைச் சேர்ந்த 84 வயது முதியவர், 12வது முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தபோது பிடிபட்டார்.