இந்தியச் சிறுவனைக் கடத்திச் சென்ற சீன ராணுவம்; மோடியை குறைகூறும் காங்கிரஸ்

புது­டெல்லி: அரு­ணாச்­ச­லப் பிர­தேசம், அப்­பர் சியாங் மாவட்­டத்­தில் லுங்டா ஜோர் பகு­தி­யைச் சேர்ந்த மிராம் தாரன், 17, ஜானி, 16, என்ற இரண்டு சிறு­வர்­களும் சாங்போ என்ற ஆற்­றில் குளித்­துக்கொண்டு இருந்­த­னர்.

அப்­போது சீன ராணு­வம் அவர்­களைக் கடத்­திச்சென்­று­விட்­ட­தா­க­வும் அவர்­களில் ஜானி தப்பி ஓடி­வந்­த­தால் அந்தக் கடத்­தல் பற்றி தெரிய வந்­த­தா­க­வும் அரு­ணாச்­சலப் பிர­தேச நாடாளுமன்ற உறுப் பினர் தபிர் காவோ தெரி­வித்­தார்.

மத்­திய அர­சின் அனைத்­துத் துறை­களும் விரை­வா­கச் செயல்­பட்டு சிறு­வனை மீட்க வேண்­டும்" என அவர் கோரி­னார்.

இந்­நி­லை­யில், இது பற்றி கருத்துக் கூறிய காங்­கி­ரஸ் நாடாளு­மன்ற உறுப்­பி­னர் ராகுல் காந்தி, சிறு­வன் சீன ராணு­வத்­தால் கடத்­தப்­பட்­டது குறித்து பிர­த­மர் மோடிக்கு எந்­த­வி­த­மான கவ­லை­யும் இல்லை என்று சாடி­னார்.

கடந்த 2020ல் இந்­தி­யச் சிறு­வர்­கள் ஆறு பேரை சீனா கடத்­திச் சென்று பிறகு இந்­தி­யா­வின் கோரிக்­கையை ஏற்று அவர்­களை விடு­வித்­தது.

இத­னி­டையே, கிழக்கு லடாக்­கில் உள்ள பாங்­காங் ஏரிப் பகு­தி­யில் சீனா பாலம் கட்டி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­வது பற்றி டுவிட்­டரில் கருத்து கூறிய ராகுல், "நம்­நாட்­டில் சட்ட விரோ­த­மாக சீனா பாலம் கட்­டு­கிறது. பிர­த­மர் மவு­னம் காப்­பதால் சீன ராணு­வத்­தின் துணிச்­சல் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கிறது," எனத் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!