இந்தியா: ஒரே நாளில் தொற்று 12% கூடியது

24 மணி நேரத்தில் புதிதாக 3.17 லட்சம் பேருக்கு பாதிப்பு

புது­டெல்லி: இந்­தி­யா­வில் அன்­றாட கொவிட்-19 தொற்று புதிய உச்­சத்­தைத் தொட்டு இருக்­கிறது.

நேற்றுக் காலை 8 மணி­யு­டன் முடி­வ­டைந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 3.17 லட்­சம் பேர் பாதிக்­கப்­பட்­ட­தாக அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரி­வித்­தன.

இது முந்­தைய நாள் அள­வை­விட 12 விழுக்­காடு அதி­கம் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். 491 பேர் மாண்­டு­விட்­ட­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 487,693 ஆகி­யது என்று மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

இந்­தி­யா­வில் இப்­போது 1.924 லட்­சம் பேர் மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரு­கி­றார்­கள்.

ஓமிக்­ரான் தொற்று கார­ண­மாக மொத்­தம் 9,287 பேர் பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். ஓமிக்­ரான் தொற்று நேற்று காலை முடி­வ­டை­ந்த 24 மணி நேரத்­தில் 3.63 விழுக்­கா­டு கூடி இருக்­கிறது.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்க்­கை­யில் குண­ம­டைந்­தோர் விகி­தம் 93.69 விழுக்­கா­டா­க­வும் உயி­ரி­ழந்­தோர் விகி­தம் 1.28 விழுக்­கா­டாக வும் இருக்­கிறது. புதன்­கி­ழமை ஒரே நாளில் மட்டும் 7.338 மில்­லி­யன் பேருக்குத் தடுப்­பூசி போடப்­பட்டது.

இத­னி­டையே, நாட்­டில் 15 முதல் 18 வரை வய­துள்ள பதின்ம வயது சிறார்­களில் பாதிப்பேருக்கு முதல் தடுப்­பூசி போடப்­பட்டு இருக்­கிறது என்­றும் இது மிக­வும் பாராட்­டுக்­கு­ரிய ஒன்று என்­றும் பிர­த­மர் நரேந்­திர மோடி வர்­ணித்­தார்.

இந்த நில­வ­ரம் இளைய, இளமைத் தன்­மை­யு­டன் கூடிய இந்­தியா, முன்­னின்று வழி­காட்­டு­வ­தைப் போல் இருக்­கிறது. இந்த வேகத்தை கட்­டிக்­காக்க வேண்­டும்.

“கொவிட்-19ஐ துடைத்­தொ­ழிக்க தடுப்­பூசி கட்­டா­ய­மா­னது. பாது­காப்பு நெறி­மு­றை­களை தவ­றா­மல் எல்­லா­ரும் கடைப்­பி­டிக்க வேண்­டும்,” என்று திரு மோடி மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்­ச­ருக்கு அளித்த பதி­லில் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான கட்டுப்­பா­டு­கள் தொடர்ந்து கடு­மை­யாகக் கடைப்­பி­டிக்­கப்­பட்­டால், புதிய உரு­மா­றிய கிருமி எது­வும் தலை­யெ­டுக்­க­வில்லை என்­றால் மார்ச் 11ஆம் தேதி கொவிட்-19 உச்­சத்­தைத் தொட்டு பிறகு குறையக்கூடும் என்று இந்­திய மருத்­துவ ஆய்வு சங்­கத்­தின் தொற்­று­நோய் துறை வல்­லு­நர் சமி­ரான் பாண்டே தெரி­வித்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!