‘தடுப்பூசியால் தப்பினோம்’

'இந்தியாவில் தொற்று கூடினாலும் சென்ற ஆண்டு அளவுக்கு மரணங்கள் இல்லை'

புது­டெல்லி: இந்­தி­யா­வில் அன்­றாடம் புதிய கொவிட்-19 தொற்று கிடு­கி­டு­வென கூடி வரு­கிறது. என்­றா­லும் அந்­தத் தொற்று கார­ண­மாக ஏற்­ப­டக்­கூ­டிய மர­ணம் உள்ளிட்ட பாதிப்­பு­கள் சென்ற ஆண்டு டெல்டா கிருமி தாண்­ட­வ­மா­டி­ய­போது இடம்­பெற்ற அள­வுக்கு இல்லை என்று மத்­திய அரசு தெரி­வித்து உள்­ளது.

இதற்கு நாட்­டின் அதி­தீ­விர தடுப்­பூசி திட்­டமே முக்­கிய காரணம் என்று அதி­கா­ரி­கள் குறிப்­பிட்­ட­னர்.

இந்­தி­யா­வில் டெல்டா கிருமி தலை­வி­ரித்­தா­டியபோது, சென்ற ஆண்டு ஏப்­ரல் 30ஆம் தேதி 386,452 பேர் தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­னர். 3,059 பேர் உயிர்­இழந்­த­னர். 3.170 மில்­லி­யன் பேர் சிகிச்சை பெற்று வந்­த­னர். ஆனால் அப்­போது தடுப்­பூசி செலுத்­தி­ய­வர்­க­ளின் அளவு வெறும் 2 விழுக்­கா­டு­தான்.

அதே­வே­ளை­யில், இந்த மாதம் 20ஆம் தேதி நில­வ­ரப்­படி, 317,532 பேருக்குப் புதி­தாக தொற்று ஏற்­பட்­டது. ஆனால் உயி­ரி­ழந்­த­வர்­கள் வெறும் 380 பேர்­தான். அதே போல சிகிச்­சை­யில் இருந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 1.92 மில்­லி­ய­னாக இருந்­தது. இப்­போது தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­வர்­க­ளின் அளவு 72% ஆக இருக்­கிறது.

ஆகை­யால் மர­ணத்தை பெரிய அள­வில் தடுப்­பூசி தடுத்து இருக்­கிறது என்று மத்­திய சுகா­தா­ரத் துறைச் செய­லா­ளர் ராஜேஷ் பூஷன் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, நேற்­றுக் காலை 8 மணிக்கு முந்­தைய 24 மணி நேரத்­தில், புதி­தாக 347,254 பேர் பாதிக்­கப்­பட்­ட­தாக மத்­திய அரசு தெரி­வித்­தது. இந்த எண்­ணிக்கை கடந்த 235 நாட்­களில் இல்­லாத அள­வுக்கு அதி­கம் என்று அது கூறி­யது.

மொத்­தம் 9,692 பேர் ஓமிக்­ரான் தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு உள்­ள­னர். புதி­தாக 703 பேர் மர­ண­ம­டைந்­த­னர். மொத்த மரண எண்­ணிக்கை 488,396 ஆகி­யது.

இவ்­வே­ளை­யில், கடந்த 24 மணி நேரத்­தில் புதி­தாக 70 லட்­சத்­திற்­கும் மேற்­பட்ட தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டதை அடுத்து நாட்­டில் மொத்­தம் 1600.43 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு இருக்­கின்­றன என்று சுகா­தார, குடும்ப நல்­வாழ்­வுத் துறை அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இத­னி­டையே, ஓமிக்­ரான் பாதிப்பு அதி­கம் உள்ள நாடு­களில் இருந்து இந்­தி­யா­வுக்கு வரு­வோர், இன்று முதல் தொற்று இல்லை என்­றா­லும் ஏழு நாள்­கள் தனி­மை­யில் இருக்க வேண்­டும். இதற்­கான புதிய விதி­மு­றை­களை மத்­திய அரசு நேற்று வெளி­யிட்­டது. இந்­தியா வரும் பய­ணி­கள் தங்­க­ளுக்­குத் தொற்று இல்லை என்­பதைக் காட்­டும் சான்­றி­த­ழு­டன் வர­வேண்­டும் என்­றும் அது கூறி­யது.

இவ்வேளையில், டெல்­லி­யில் வார­ இ­றுதி நாள்­களில் நடப்பில் உள்ள ஊர­டங்கைத் தளர்த்த முதல்வர் கெஜ்­ரி­வால் முடிவு செய்­துள்­ள­தாகத் தக­வல்­கள் கூறின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!