50 ஆண்டுகால அணையா விளக்கு போர் நினைவுச்சின்ன விளக்குடன் ஐக்கியமானது

புது­டெல்லி: இந்­தியத் தலை­ந­கர் புது­டெல்­லி­யில் இருக்­கும் இந்­தியா கேட் பகு­தி­யில் கடந்த 50 ஆண்டு கால­மாக ஒளிர்ந்து வரும் ‘அமர் ஜவான் அணையா விளக்கு’ நேற்று பக்­கத்­தில் புதி­தாக அமைக்­கப்­பட்டு இருக்­கும் தேசிய போர் நினை­வுச் சின்ன விளக்­கு­டன் ஐக்­கி­ய­மா­னது.

உல­கில் 1914 முதல் 1921 வரை நடந்த முதல் உல­கப்­போ­ரில் மாண்டு­போன 70,000 வீரர்­க­ளின் நினை­வாக இந்­தி­யா­ கேட் 1931ல் அமைக்­கப்­பட்­டது. பிறகு முன்­னாள் பிர­த­மர் இந்­திரா காந்தி 1971ல் அங்கு அமர் ஜவான் அணையா விளக்கை ஏற்றி வைத்­தார்.

அமர் ஜவான் அணையா விளக்கு, முதல் உல­கப்­போ­ரின் 50வது ஆண்டை நினை­வு­கூ­ரும் வகை­யில், அருகே இருக்­கும் போர் நினை­வுச்­சின்ன விளக்­கு­டன் ஐக்­கி­ய­மா­கும் என்று மத்­திய அரசு அறி­வித்­தது. இந்­தப் போர் நினை­வுச்­சின்­னம் இந்­தியா கேட் பகுதிக்கு அருகே ‘சி ஹெக்­ஸ­கன்’ பகு­தி­யில் 2019ல் கட்­டப்­பட்­டது.

இந்­திய சுதந்­தி­ரத்­துக்­குப் பிறகு உயிர்­நீத்த 22,550 ராணுவ வீரர்­களின் பெயர்­கள் இந்­தச் சின்­னத்­தில் பொறிக்­கப்­பட்டு உள்­ளன.

இந்­நி­லை­யில், நேற்று நடந்த ஒரு நிகழ்ச்­சி­யின் மூலம் 50 ஆண்டு கால அணையா விளக்கு தேசிய போர் நினை­வுச்­சின்ன விளக்­கு­டன் ஐக்­கி­ய­மா­னது.

இத­னி­டையே, 50 ஆண்­டு­கால அணையா விளக்கை அணைத்­து­விட்­டார்­கள் என்று மத்­திய அரசை கடு­மை­யாகக் குறை­கூறி இருக்­கும் காங்­கி­ரஸ், அந்த விளக்கை மீண்டும் ஒளி­ரச் செய்­வோம் என்று டுவிட்­ட­ரில் சூளு­ரைத்­தது.

ஒரு சில­ரால் நாட்டு பக்­தி­யை­யும் தியா­கத்­தை­யும் புரிந்­து­கொள்ள இய­லாது என்று காங்­கி­ரஸ் நாடாளு­மன்ற உறுப்­பி­னர் ராகுல் காந்தி காட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

இதர கட்­சி­யி­னர் பல­ரும் இவ்­வாறு குறை­கூறி இருக்­கி­றார்­கள்.

இந்­நி­லை­யில், அதற்கு விளக்­கம் அளித்த மத்­திய அரசு, 50 ஆண்­டு­கால அணையா விளக்கை அணைக்­க­வில்லை என்­றும் அது போர் நினை­வுச்­சின்ன விளக்­கு­டன் ஐக்­கி­ய­மாகி இருக்­கிறது என்­றும் தெரி­வித்­தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!