உத்தரப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?

உத்தரப் பிரதேச காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் பிரியங்கா?

1 mins read
836a23a9-c5dd-4185-925f-b3c605e05686
லக்னோவில் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இளையர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். படம்: இந்திய ஊடகம் -

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறங்கக் கூடும் என்று எதிர்பார்க்கும் அளவிற்கு நேற்று ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

சட்­ட­மன்­றத் தேர்­த­லை­யொட்டி நேற்று காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராகுல் காந்­தி­யும் கட்சி­யின் உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­துக்­கான பொதுச் செய­லா­ள­ரான பிரி­யங்கா காந்­தி­யும் கட்சி இளை­யர் பிரிவின் தேர்­தல் கொள்கை அறிக்கையை வெளி­யிட்­ட­னர்.

அப்போது, காங்­கி­ரஸ் சார்­பில் முத­ல­மைச்­சர் பத­விக்கு யார் கள­மி­றங்­கு­வார் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, "கட்­சி­யில் என்னை தவிர வேறு எந்த முகத்­தை­யா­வது நீங்­கள் பார்க்க முடி­கி­றதா? என் முகம் தெரி­கிறது அல்­லவா?," என்று செய்­தி­யா­ளர்­களை நோக்கி பிரி­யங்கா கேட்­டார்.

இதை வைத்துப் பார்க்­கை­யில் காங்­கி­ரஸ் முதல்­வர் வேட்­பா­ள­ரா­க பிரியங்கா காந்தி கள­மி­றங்­கக் கூடும் என்று அனு­மா­னிக்க இடம் இருக்­கிறது.