தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

படத்தைப் பார்த்ததால் வினை; கொலைகாரர்களான சிறார்கள்

1 mins read
5839e9e2-28bb-47b6-924d-58f9b17dc244
-

புது­டெல்லி: குற்­ற­வா­ளி­களை எடுப்­பா­கக் காட்­டும் திரைப்­ப­டங்­க­ளைப் பார்த்து பார்த்து தாங்­களும் அதே­போல ஆக­வேண்­டும் என்று முடிவு செய்த மூன்று சிறு­வர்­கள், ஆட­வர் ஒரு­வரை கொலை செய்­து­விட்­ட­னர்.

இந்­தச் சம்­ப­வம் இந்­திய தலை­ந­கர் புது­டெல்­லி­யில் பெரும் பர­பரப்பைக் கிளப்பி இருக்­கிறது.

புது­டெல்­லி­யில் உள்ள ஜகாங்­கீர்­புரி மருத்­து­வ­ம­னை­யில் கத்திக் குத்து காயங்­க­ளு­டன் அனு­ம­திக்­கப்­பட்ட ஷிபு என்­ப­வர் சிகிச்­சை­யின்போதே மர­ண­ம­டைந்­து­விட்­டார். அது பற்றி விசா­ரித்த அதி­கா­ரி­கள் அந்­தக் கொலை­யில் மூன்று சிறு­வர்­க­ளுக்­குத் தொடர்பு இருப்­ப­தா­கக் கண்­டு­பி­டித்­த­னர்.

அந்த மூவ­ரை­யும் பிடித்து விசா­ரித்தபோது, குண்­டர்­கும்­பல் திரைப்­ப­டங்­களைப் பார்த்து தாங்­களும் அது­போல் ஆக வேண்­டும் என்று முடிவு செய்­த­தாக அவர்­கள் கூறி­னர். ஒரு­வரைக் கொலை செய்து அதைக் காணொளி எடுத்து இன்ஸ்­ட­கிரா­மில் பதிவு செய்­யும் நோக்­கத்­தில் அவர்­கள் 'பட்­னாம் கேங்' என்ற ஒரு குண்­டர் கும்­பலை ஏற்­ப­டுத்­தி­னார்­கள்.

ஷிபு என்­ப­வரை மடக்கி அவரை வேண்­டு­மென்றே வம்புக்கு இழுத்து மாறி மாறி மூவ­ரும் அவரைக் கத்­தி­யால் குத்­தி­னர்.

அந்த ஆட­வர் சத்­தம் போட்­ட­தைக் கேட்டு பல­ரும் வந்­து­வி­டு­வார்­கள் என்­ப­தால் அவரை அப்­படி­யே­விட்டுவிட்டு சிறு­வர்­கள் ஓடி­விட்­ட­தாக காவல்­துறை அதி­கா­ரி­கள் கூறினர்.

இப்­போது விசா­ர­ணைக் காவ­லில் இருக்­கும் அந்த மூவ­ரும் இது­போன்ற மேலும் பல சம்­ப­வங்­களில் ஈடு­பட்­டி­ருக்­கும் வாய்ப்பு இருப்­ப­தாக அஞ்­சப்­ப­டு­கிறது என்று அதி­கா­ரி­கள் கூறினர்.