கணவரின் தலையோடு காவல்நிலையம் போன கொலைகார மனைவி; பயந்துபோன அதிகாரிகள்

ரேணிகுண்டா: கண­வ­ரின் தலை­யோடு வந்த ஒரு பெண்­ணைப் பார்த்து ஆந்­திர மாநி­லத்­தைச் சேர்ந்த போலிஸ் அதி­கா­ரி­கள் அதிர்ந்து போனார்­கள்.

ஆந்திர மாநி­லத்­தின் குண்­டூர் மாவட்­டம் நர­சா­ராவ்­பேட்­டை­யைச் சேர்ந்த வசுந்­தரா, 50, என்­ப­வர் கள்­ளக்­கா­தல் தொடர்­பில் தன்­னு­டைய கண­வ­ரான ரவிச்­சந்­திரா, 53, என்­ப­வரை கத்­தி­யால் கழுத்தை அறுத்து கொலை செய்­து­விட்­டார்.

பிறகு தலையைத் துண்­டித்து அதை ஒரு பிளாஸ்­டிக் பைக்­குள் போட்டு ரத்­தக்கரை­யோடு ஆட்டோ ஒன்­றில் ஏறி காவல்­நி­லை­யத்­திற்குச் சென்று அவர் சர­ண­டைந்­தார்.

அங்கு வசுந்­தரா தெரி­வித்­த­வற்றைக் கேட்டு அதி­கா­ரி­கள் பயந்துபோய் பையைத் திறந்து பார்த்­த­போது அதில் மனித தலை இருந்­த­தைக் கண்டு திடுக்­கிட்­ட­னர்.

தொடர்ந்து வசுந்­தரா கைதா­னார். உட­ன­டி­யாக அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­துக்கு விரைந்­த­னர்.

கண­வ­ரின் உடல் பிரே­தப் பரி­சோ­த­னைக்கு அனுப்­பப்­பட்டு உள்­ளது. புலன்­ வி­சா­ரணை தொடர்ந்து நடந்து வரு­கிறது. ரேணி­குண்­டா­வில் வசித்து வந்த ரவிச்­சந்­திரா-வசுந்­தரா தம்­பதிக்கு 20 வய­தில் ஒரு மகன் இருக்­கி­றார்.

ரவிச்­சந்­தி­ரா­வுக்­கும் வேறு ஒரு பெண்­ணுக்­கும் தொடர்பு உண்டு என்­றும் இத­னால் அவரை வசுந்­தரா கொன்­று­விட்­டார் என்­றும் போலிஸ் அதி­கா­ரி­கள் தெரி­வித்து இருக்­கி­றார்­கள்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!