கர்நாடகா: வார இறுதி ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்டது

டெல்லியில் ஊரடங்கு உத்தரவை தளர்த்த ஆளுநர் மறுப்பு

பெங்களூரு: கர்­நா­ட­கா­வில் வார இறுதி அம­லில் இருந்த கொரோனா கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன. அங்கு மருத்­துவ ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை குறைந்­துள்­ளதை அடுத்து, இந்த முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அம்­மா­நி­லத்­தின் வரு­வாய்த் துறை அமைச்­சர் ஆர்.அசோக் தெரி­வித்­துள்­ளார்.

வார இறு­தி­யில் அம­லில் உள்ள முழு ஊர­டங்கு விலக்­கிக்கொள்­ளப்­பட்­டுள்­ளது. எனி­னும், இரவு ஊர­டங்­கும் திரை­ய­ரங்­கு­கள், நிகழ்ச்சி அரங்­கு­கள் உள்­ளிட்ட வணிக அமைப்­பு­களில் ஐம்­பது விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே அனு­மதி என்­பன உள்­ளிட்ட கட்­டுப்­பா­டு­கள் நீடிக்­கின்­றன.

கர்­நா­ட­கா­வில் வார இறு­தி­யில் வெள்­ளிக்­கி­ழமை இரவு 10 மணி முதல் திங்­கட்­கி­ழமை காலை 5 மணி வரை ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது அது முடி­வுக்­கு ­வந்­துள்­ளது.

"எனி­னும், அனைத்து நாள்­க­ளி­லும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை­யி­லான ஊர­டங்கு உத்­த­ரவு மாநி­லம் முழு­வ­தும் அம­லில் இருக்­கும். மேலும், முன்பே அறி­விக்­கப்­பட்ட வழி­காட்­டும் நெறி­மு­றை­க­ளி­லும் மாற்­றங்­கள் ஏதும் இல்லை.

"மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­படும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் இந்த முடி­வு­கள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் விகி­தம் ஐந்து விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மாக பதி­வா­கும்­போது இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் மீண்­டும் அம­லுக்கு வரக்­கூ­டும்," என்று வெள்­ளிக்­கி­ழமை செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் அமைச்­சர் அசோக் தெரி­வித்­தார்.

பொது­மக்­கள் வழி­காட்­டும் நெறி­மு­றை­க­ளைப் பின்­பற்­றத் தவ­றி­னால், கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­படும் என அம்­மா­நில உள்­துறை அமைச்­சர் அரகா ஜானேந்­திரா எச்­ச­ரித்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் புதி­தாக சுமார் 48 ஆயி­ரம் பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. இதை­ய­டுத்து, சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை 323,000ஆக அதி­க­ரித்­துள்­ளது.

டெல்லி மாநில நிலவரம்

இதற்­கி­டையே, டெல்­லி­யில் வார இறுதி நாள்­களில் அம­லில் உள்ள ஊர­டங்கு உத்­த­ரவை தளர்த்த இய­லாது என அம்­மா­நில ஆளு­நர் அனில் பைஜால் தெரிவித்­துள்­ளார். இது தொடர்­பான முன்­மொ­ழிவை டெல்லி அரசு அவ­ருக்கு அனுப்பி வைத்­தி­ருந்­தது.

அதில், கடை­க­ளைத் திறக்­க­வும் ஐம்­பது விழுக்­காடு ஊழி­யர்­க­ளு­டன் தனி­யார் அலு­வ­ல­கங்­கள் இயங்­க­வும் அனு­ம­திக்க வேண்­டும் எனக் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், ஆளு­நர் இதற்கு ஒப்­புக்­கொள்­ள­வில்லை. வார இறு­தி­யில் அம­லில் உள்ள ஊர­டங்கு உத்­த­ரவை அகற்ற இய­லாது என்­றும் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற கடை­க­ளைத் திறக்க வேண்­டிய அவ­சி­யம் எழ­வில்லை என்­றும் ஆளு­நர் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனி­னும், தனி­யார் அலு­வ­ல­கங்­கள் 50 விழுக்­காடு ஊழி­யர்­க­ளு­டன் இயங்­கு­வ­தற்கு மட்­டும் ஆளு­நர் அனு­ம­தித்­துள்­ளார்.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய டெல்லி துணை முதல்­வர் மனிஷ் சிசோ­டியா, மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாது­காக்­கும் வகை­யில் தொழில் நிறு­வ­னங்­கள் செயல்­பட அனு­ம­திக்க வேண்­டி­யது அவ­சி­யம் என்று கூறி­யுள்­ளார். தொற்று பாதிப்பு குறை­யும்­போது இத்­த­கைய தளர்­வு­களை அளிப்­ப­தில் தவ­றில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

மேற்கு வங்க நிலவரம்

இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் அன்றாட தொற்று எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகி உள்ளது.

நேற்று முன்தினம், அங்கு புதிதாக 9,154 பேருக்கு கிருமி தொற்றி உள்ளது. 134,816 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!