மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 7 பேர் பலி

மும்பை: அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பில் ஏற்­பட்ட திடீர் தீ விபத்­தில் சிக்கி ஏழு பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வம் மும்­பை­யில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்த விபத்­தில் சிக்கி இரு­ப­துக்­கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்­த­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­வித்­தன.

மும்­பை­யின் டார்­டியோ பகு­தி­யில் அமைந்­துள்­ளது அந்த 20 மாடி­கள் கொண்ட கமலா குடி­யி­ருப்பு.

நேற்று காலை அந்த அடுக்­கு­மா­டிக் குடி­யி­ருப்­பின் 18வது தளத்­தில் திடீ­ரெ­னத் தீ பற்­றி­யது. அங்கு வசிப்­ப­வர்­கள் சுதா­ரிப்­ப­தற்­குள் சில நிமி­டங்­களில் அந்த தளம் முழு­வ­தும் தீ மள­ம­ள­வென வேக­மா­கப் பர­வி­யது. அங்­கி­ருந்த ஒரு வீட்­டில் சமை­யல் எரி­வாயு உருளை வெடித்­துச் சித­றி­ய­தால் நிலைமை மேலும் மோச­ம­டைந்­தது.

இந்­நி­லை­யில், தக­வல் அறிந்து தீய­ணைப்­புத் துறை­யைச் சேர்ந்த 13 வாக­னங்­கள் அங்கு விரைந்­தன. நூற்­றுக்­கும் மேற்­பட்ட தீய­ணைப்பு வீரர்­கள் தீயை அணைக்­கும் பணியில் ஈடு­பட்­ட­னர். நேற்று மாலை நில­வ­ரப்­படி, இந்த விபத்­தில் ஏழு பேர் பலி­யா­கி­விட்­ட­தா­க­வும் இரு­பதுக்கும் மேற்­பட்­டோர் காய­ம­டைந்து மருத்துவ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டுள்­ள­தா­க­வும் தெரியவந்­துள்­ளது.

உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!