களமிறங்கும் குற்றப்பின்னணி கொண்டோரின் வாரிசுகள்

லக்னோ: குற்­றப்­பின்­னணி கொண்­ட­வர்­கள் தேர்­த­லில் போட்­டி­யி­டு­வ­தற்­கான விதி­மு­றை­களை தேர்­தல் ஆணை­யம் கடு­மை­யாக்கி உள்ளது. இருப்பினும், உத்­த­ரப் பிர­தே­சத்­தில் குற்­றப்­பின்­னணி கொண்ட அர­சி­யல் பிர­மு­கர்­கள் தங்­கள் வாரி­சு­களை கள­மி­றக்­கு­கின்­ற­னர்.

அம்­மா­நி­லத்­தில் அடுத்த மாதம் சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இந்­நி­லை­யில், பாஜக இது­வரை அறி­வித்­துள்ள 109 வேட்­பா­ளர்­களில் 37 பேர் மீது குற்ற­ வ­ழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன. அம்­மா­நி­லத்­தின் துணை முதல்­வர் கேசவ் பிர­சாத் நான்கு வழக்­கு­களை எதிர்­கொண்­டுள்­ளார்.

முக்­கிய எதிர்க்­கட்­சி­யான சமாஜ்­வாடி அறி­வித்த வேட்­பா­ளர்­களில், 20 பேர் குற்­றப்­பின்­னணி கொண்­ட­வர்­கள் ஆவர். இதே போல் மற்ற கட்­சி­களும் குற்­றப் பின்­ன­ணி கொண்ட வேட்­பா­ளர்­களைக் கள­மி­றக்கி வந்த நிலை­யில், தற்­போது திடீர் மாற்­றம் ஏற்­பட்­டுள்­ளது.

குற்ற வழக்­கு­களை எதிர்­நோக்­கும் பிர­மு­கர்­கள் பலர் தங்­க­ளுக்­குப் பதி­லாக வாரி­சு­க­ளை­யும் உற­வி­னர்­கள் அல்­லது விசு­வா­சி­க­ளை­யும் தேர்­த­லில் போட்­டி­யிட வைக்­கின்­ற­னர். கட்­சித் தலை­மையை சமா­தா­னப்­ப­டுத்தி தொகு­தி­க­ளைக் கேட்­டுப் பெறும் அர­சி­யல் பிர­மு­கர்­கள் பிர­சா­ரத்­துக்­குச் செல்­வ­தை­யும் கூட தவிர்ப்­ப­தாக கூறப்­ப­டு­கிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!