தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயிலில் சத்தமாகப் பேசினால், பாட்டு கேட்டால் அபராதம்

1 mins read
d29bb722-675d-4d62-8a40-075b39945f57
-

புது­டெல்லி: ரயில் பய­ணி­க­ளுக்­கான புதிய விதி­மு­றை­கள் குறித்த அறி­விப்பு பல­ருக்கு அதிர்ச்சி அளித்­துள்­ளது.

இனி ரயி­லில் மற்ற பய­ணி­க­ளுக்குத் தொல்லை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் சத்­த­மாகப் பாட்டு கேட்­பது, கைபே­சி­யில் பேசு­வது ஆகிய செயல்­பா­டு­க­ளுக்கு அப­ரா­தம் விதிக்­கப்­படும் என மத்­திய ரயில்வே துறை அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக ஏரா­ள­மானோர் அளித்த புகார்­க­ளின் அடிப்­ப­டை­யில், இந்த புதிய விதி­முறை வகுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

குறிப்­பிட்ட ஒரு­வ­ரால் தங்­க­ளுக்குத் தொல்லை ஏற்­ப­டு­வ­தாக மற்ற பய­ணி­கள் புகார் அளித்­தால் ரயில்வே காவல்­து­றை­யி­ன­ரும் பய­ணச்­சீட்டு பரி­சோ­த­க­ரும் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என ரயில்வே துறை உத்­த­ர­விட்­டுள்­ளது.

மேலும், இரவு பத்து மணிக்கு மேல் விளக்­கு­கள் எரி­யக்­கூ­டாது என்­ப­தும் புதிய விதி­மு­றை­களில் ஒன்­றாகும்.