வெளிநாட்டுப் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை

புது­டெல்லி: வெளி­நா­டு­களில் இருந்து இந்­தியா வரும் பய­ணி­க­ளுக்கு தொற்­றுப் பாதிப்பு இருப்­பின், அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்த தேவை இல்லை என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

அண்­மை­யில்­தான் தொற்று அபா­யம் அதி­க­முள்ள நாடு­க­ளின் பட்­டி­யலை மத்­திய அரசு வெளி­யிட்­டது. குறைந்­த­பட்­சம் அங்­கி­ருந்து வரும் பய­ணி­க­ளுக்கு கட்­டாய கொரோனா பரி­சோ­தனை நடத்­தப்­படும் என்­றும் தனி­மைப்­ப­டுத்­தல் நட­வ­டிக்கை கட்­டா­யம் என்­றும் அறி­விக்­கப்­பட்­டது.

இந்­நி­லை­யில், இந்த விதிமுறை­களைத் திருத்தி புதிய வழி­காட்­டு­தல்­கள் வெளி­யி­டப்­பட்டு உள்­ளன. அதன்­படி அனைத்து வெளி­நாடு­களில் இருந்து வரும் பய­ணி­களை கட்­டாய தனி­மைப்­படுத்­தல் நடவடிக்கைக்கு உட்­ப­டுத்­தத் தேவை இல்லை என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் நேற்­றைய நில­வ­ரப்­படி மேலும் 337,704 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. தொடர்ந்து மூன்று நாள்­க­ளாக அன்­றாட தொற்று எண்­ணிக்கை முந்­நூ­றா­யி­ரத்­தைக் கடந்து பதி­வாகி வரு­கிறது.

இதன்­மூ­லம் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 38,903,731ஆக அதி­க­ரித்­துள்­ளது.

புதி­தா­கப் பாதிக்­கப்­பட்­டோ­ரில் 10,050 பேருக்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

தற்­போது 2,113,365 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இதுவே கடந்த 237 நாள்­களில் ஆக அதி­க­மான எண்­ணிக்கை.

கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மேலும் 488 பேர் மாண்­ட­னர். ஒட்­டு­மொத்த மரண எண்­ணிக்கை 488,884 ஆக அதி­க­ரித்­துள்­ளது. நாடு முழு­வ­தும் இந்­தி­யா­வில் இது­வரை 1.610 பில்­லி­ய­னுக்­கும் அதி­க­மான கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் போடப்­பட்­டுள்­ள­தாக சுகாதார அமைச்சு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!