சமாஜ்வாதி கட்சியில் உயரமான மனிதர்

சமாஜ்வாதி கட்சியில் உயரமான மனிதர்

1 mins read
d335dda2-e5ce-468a-be73-3d32469bbc6b
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் (வலமிருந்து 4வது) தலைமையில் அக்கட்சியில் சேர்ந்த உயரமான மனிதர் தர்மேந்திர பிரதாப் சிங்.படம்: சமாஜ்வாதி/ டுவிட்டர் -

லக்னோ: பிப்­ர­வரி 10ஆம் தேதி சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெ­றும் உத்­த­ர­ப்பி­ர­தேச மாநி­லத்­தில் அடுத்­த­டுத்து பலர் கட்சி மாறி வரு­கின்­ற­னர்.

நாட்­டி­லேயே ஆகப்­பெ­ரிய மாநி­ல­மாக இருப்­ப­தால் உத்­தரப்பிர­தேச தேர்­தல் நாடு முழு­வ­தும் பெரும் எதிர்­பார்ப்­பை­யும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அந்த மாநி­லத்­தில் ஆளும் பாஜக, அகி­லேஷ் யாதவ் தலை­மை­யி­லான சமாஜ்­வாதி கட்சி, காங்­கி­ரஸ் கட்சி ஆகி­யவற்­றுக்கு இடையே கடும் போட்டி நில­வு­கிறது.

இந்­நி­லை­யில் கட்­சி­விட்டு கட்சி மாறும் காட்­சி­கள் அடிக்கடி அரங்­கேறி வரு­கின்­றன.

ஏற்ெக­னவே பாஜ­க­வில் இருந்து முக்­கிய தலை­கள் சமாஜ்­வாதி கட்­சி­யில் சேர்ந்த நிலை­யில் இந்­தி­யா­வின் மிக உய­ர­மான மனி­த­ரும் அக்கட்சியில் இணைந்­துள்­ளார்.

எட்டு அடி 2 அங்­கு­லம் கொண்ட நாட்­டின் மிக உய­ர­மான மனி­த­ரான தர்­மேந்­திர பிர­தாப் சிங், சமாஜ்­வாதி தலை­வர் அகி­லேஷ் யாதவ் முன்­னி­லை­யில் கட்­சி­யில் சேர்ந்தார்.

தர்­மேந்­திர பிர­தாப் சிங், 46, ஏற்­கெ­னவே மிக உய­ர­மான மனி­த­ராக கின்­னஸ் உலக சாத­னை­யில் இடம்பெற்­றுள்­ளார்.

உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம் பிர­தாப்­கர் மாவட்­டத்­தில் உள்ள நர்­ஹர்­பூர் காசி­யாஹி கிரா­மத்­தைச் சேர்ந்த அவர், முது­க­லைப் பட்­டம் பெற்­ற­வர்.

கடந்த ஆண்டு ஏப்­ர­லில் நடந்த உத்­த­ரப்­பி­ர­தேச பஞ்­சா­யத்து தேர்­த­லில் நண்­பர் ஒரு­வ­ருக்­காக பிர­சா­ரம் மேற்­கொண்டு அனை­வ­ரின் கவ­னத்தையும் அவர் ஈர்த்­தி­ருந்தார்.