இம்பால்: மணிப்பூரைச் சேர்ந்த 24 வயதான நிரஞ்ஜோய் சிங் (படம்) தண்டால் எடுப்பதில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். ஒரே நிமிடத்தில் அவர் 109 தண்டால் எடுத்துள்ளார்.
நிரஞ்ஜோய், ஏற்கெனவே விரல் நுனியில் அதிக முறை தண்டால் எடுத்து கின்னஸ் சாதனை படைத்தவர். பின்னர் ஒரே நிமிடத்தில் 105 முறை தண்டால் எடுத்து சாதனை படைத்த அவர், தற்போது அச்சாதனையை தாமே முறியடித்துள்ளார்.
நிரஞ்ஜோய் சிங்கின் இந்த அசாத்தியமான சக்தியைப் பார்க்க வியப்பாகவும் அவரது சாதனை பெருமை அளிப்பதாகவும் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பாராட்டியுள்ளார்.

