இந்தியக் கொடி அவமதிப்பு - அமேசான் மீது வழக்குப் பதிவு

உலகின் மிகப்பெரிய மின் வணிக நிறுவனமான அமேசான் மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டது.

அந்நிறுவனத்துக்கு எதிராக இந்தியாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இம்முறை இந்தியத் தேசியக் கொடியை அவமதித்த காரணத்துக்கு.

இந்தியக் குடியரசு தினத்தை முன்னிட்டு, அமேசான் தளத்தில் காலணிகள், டி-சட்டைகள், குழந்தைகளுக்கான ஆடைகள் போன்றவை விற்கப்பட்டு வருகின்றன.

அவற்றில், குறிப்பாக காலணிகளில் தேசியக் கொடி அச்சிட்டு இருப்பது இந்தியர்களிடையே கடும்கோபத்தைக் கிளப்பியுள்ளது.

அந்நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்ய மத்தியப் பிரேதசத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அம்மாநில காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, சமூக வலைதளங்களில் அமேசானுக்கு எதிராக பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

அந்நிறுவனம் தொடர்ந்து இந்தியர்களின் உணர்வைக் காயப்படுத்துவதாக அவர்கள் குறைகூறுகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!