ஆயுத பலத்தைக் காட்டிய இந்தியா

ஆயுத பலத்தைக் காட்டிய இந்தியா

2 mins read
127e6f1e-e71d-4ea8-be9f-873a14db0534
குடியரசு தின விழாவில் அணிவகுத்துச் சென்ற கர்நாடக மாநிலத்தின் அலங்கார ஊர்தி. படம்: இபிஏ -

புது­டெல்லி: இந்­தியா, குடி­யரசு தின விழா­வில் தனது ஆயு­தப் பலத்தை பறை­சாற்­றி­யி­ருக்­கிறது.

நாட்­டின் 73வது குடி­ய­ரசு தின விழா நேற்று டெல்­லி­யி­லும் மற்­றும் மாநி­லங்­க­ளின் தலை­ந­க­ரங்­க­ளி­லும் கோலா­க­ல­மாக நடை­பெற்­றது.

அதி­பர் ராம்­நாத் கோவிந்த், டெல்லி ராஜ­பா­தை­யில் தேசி­யக்­கொடி ஏற்­றி­னார். அதன்­பின்­னர், முப்­ப­டை­க­ளின் அணி­வ­குப்பு மரி­யா­தையை அவர் ஏற்­றுக்கொண்­டார்.

இந்த அணி­வ­குப்பு டெல்லி ராஜ­பா­தை­யி­லி­ருந்து தொடங்கி இந்­தியா கேட் வரை நடந்­தது. இதில், 1965, 1971 போரில் பயன்­ப­டுத்­திய டேங்­கு­கள், தற்­போ­தைய நவீன ஆயு­தங்­கள் இடம்­பெற்­றன.

சென்னை ஆவ­டி­யில் தயா­ரிக்கப் பட்ட 'எம்­பிடி அர்­ஜூன் எம்கே-1' டேங்­கு­கள், சென்­சு­ரி­யன் டேங்­கு­கள், 'பிடி-76' டேங்­கு­கள், ஏபிசி டோபாஸ் டேங்­கு­கள் உள்­ளிட்­டவை அணி­வ­குப்­பில் இடம்­பெற்­றன. மேலும் உள்­நாட்­டில் தயா­ரிக்­கப்­பட்ட எம்கே-1 பீரங்­கி­யும் அணி­வ­குப்­பில் இடம்­பெற்­றி­ருந்­தது.

வான்­குடை வீரர்­கள் படை, ஜம்மு காஷ்­மீர் காலாட்­ப­டை­யி­னர், எஸ்­ஐ­கே­எச் காலாட்ப­டை­யி­னர், அசாம் ரெஜி­மெண்ட் படை­யி­னர், எல்­லைப் பாது­காப்புப் படை­யி­ன­ரின் ஒட்­ட­கப்­படை பிரி­வி­ன­ரும் அணி­வ­குத்­துச் சென்­ற­னர்.

இந்­திய கடற்­ப­டை­யின் திறன்­களை வெளிப்­ப­டுத்­தும் வகை­யில் கடற்­படை வீரர்­க­ளின் அணி­வகுப்பும் இடம்­பெற்­றது.

எதிர்­கா­லத்­திற்­காக மாற்­ற­ம­டை­யும் விமா­னப்­படை என்ற தலைப்­பில் விமா­னப்­ப­டை­யும் அணி­வ­குத்­துச் சென்­றது.

குடி­ய­ரசு தின அணி­வ­குப்­பில் பல்­வேறு மாநி­லங்­களைச் சேர்ந்த அலங்­கார ஊர்­தி­கள் ராஜ­பாதை வழி­யாக அணி­வ­குத்து வந்­தன.

நாடு முழு­வ­தும் இருந்து தேர்ந்­தெ­டுக்­கப்பட்ட சிறந்த கலை­ஞர்­கள் நடன நிகழ்ச்­சி­யில் பங்­கேற்­ற­னர். கிரு­மிப் பர­வல் கார­ண­மாக வெளி­நாட்டுத் தலை­வர்­கள் இம்முறை சிறப்பு விருந்­தி­ன­ராகப் பங்­கேற்க வில்லை.

இந்­நி­லை­யில் குடி­ய­ரசு தின விழா­வில் பங்­கேற்­ப­தற்கு முன்­னர் பிர­த­மர் மோடி, தேசிய போர் வீரர்­கள் நினை­வி­டத்­தில் அஞ்­சலி செலுத்­தி­னார். உத்­தரகாண்ட் மாநி­லத்­தின் பாரம்­ப­ரிய தொப்­பியை அணிந்து அவர் வித்­தி­யா­ச­மா­கக் காணப்­பட்­டார்.

அவர் அணிந்­தி­ருந்த தொப்­பி­யில் உத்­த­ரகாண்ட் மலரான பிரம்­மக்­க­ம­லம் பொறிக்­கப்­பட்­டி­ருந்­தது. மணிப்­பூர் மாநில பாரம்­ப­ரிய துண்­டை­யும் மோடி தோளில் அணிந்­தி­ருந்­தார். கடந்த ஆண்டு குடி­ய­ரசு தின விழா­வில் குஜ­ராத்­தில் உள்ள ஜாம்­ந­கர் அரச குடும்­பத்­தி­னர் பரி­சாக அளித்த தலைப்­பா­கை­யு­டன் மோடி பங்­கேற்­றார்.