புதுடெல்லி: இந்திய - சீன எல்லையில் காணாமல்போன சிறுவனை சீனா விரைவில் ஒப்படைக்கும் என்று இந்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
காணாமல் போனதாகக் கூறப்படும் அந்தச் சிறுவனை சீன ராணுவம் கண்டுபிடித்திருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது.
"சிறுவனை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவப் பிரிவினர் சாதகமான பதிலை நமக்குத் தந்துள்ளனர்," என்று அமைச்சர் ரிஜிஜு கூறியுள்ளார்.
"மோசமான வானிலை காரணமாக சிறுவனை ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒப்படைக்கும் தேதி அறிவிக்கப்படும்," என்றும் அவர் தெரிவித்தார்.

