ஆள்கடத்தல் கும்பல் கைது

ஆள்கடத்தல் கும்பல் கைது

1 mins read
ab94f54e-f293-4f3d-9ffa-401a8d09fb2a
-

மும்பை: அமெ­ரிக்க-கன­டிய எல்­லை­ய­ருகே சென்ற வாரம் இந்­தி­யர்­கள் நால்­வ­ரின் சட­லங்­கள் உறைந்த நிலை­யில் காணப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பில் இந்­தி­யக் காவல்­துறை ஆறு பேரைத் தடுத்­து­வைத்­துள்­ளது. சட்­ட­வி­ரோ­தக் குடி­யேற்­றம் தொடர்­பில் அவர்­கள் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

மாண்ட நால்­வ­ரும் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும், அவர்­களை அவ்­வாறு அனுப்­பி­வைத்த ஆள்­கடத்­தல்­கா­ரர்­க­ளைத் தேடி­வரு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் கூறி­னர். கைதான ஆறு பேரும் சுற்­றுப்­ப­யண ஏற்­பாட்டு நிறு­வ­னத்தை நடத்­தி­ய­தா­கத் தெரி­கிறது. நால்­வர் மாண்ட சம்­ப­வம் தொடர்­பில் அமெரிக்கர் ஒரு­வர் மீது அந்­நாட்டு அதி­கா­ரி­கள் ஆள்­க­டத்­தல் குற்­றம்­சாட்­டி­யுள்­ள­னர்.