பீகாரில் ரயில்வே தேர்வு முறையை கண்டித்து வன்முறை; ரயிலுக்கு தீவைப்பு

பீகாரில் ரயில்வே தேர்வு முறையை கண்டித்து வன்முறை; ரயிலுக்கு தீவைப்பு

1 mins read
dc0c840f-6f41-4394-958c-9bda84142129
பீகாரின் கயா ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்ட பயணிகள் ரயில். படம்: ஏஎஃப்பி -

பாட்னா: பீகா­ரில் ரயில்வே தேர்வு முறை­யைக் கண்­டித்து மாண­வர்­கள், போராட்­டத்­தி­லும் வன்­மு­றை­யி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். தொடர்ந்து இரண்­டா­வது நாளாக ரயில் மறி­ய­லில் ஈடு­பட்­ட­வர்­கள், கயா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றுக்குத் தீ வைத்­த­னர்.

ரயில்வே துறை­யில் பணி­யில் அமர ஒரே ஒரு தேர்வு எழுத வேண்­டிய நிலை­தான் இருந்து வந்­தது.

இந்­நி­லை­யில் அந்­தத் துறை, திடீ­ரென இரண்­டாம் நிலைத் தேர்­வும் எழுதவேண்­டும் என்று அறி­வித்­தது.

இத­னால், ஆத்­தி­ர­ம­டைந்த மாண­வர்­கள் ரயில் மறி­ய­லில் இறங்­கி­னர். நேற்று முழு­வ­தும் பல்­வேறு இடங்­களில் அவர்கள் ரயில் மறி­ய­லில் ஈடு­பட்­ட­னர்.

ஜெகா­னா­பாத்­தில் நேற்று நடந்த ஒரு போராட்­டத்­தில் மாண­வர்­கள் பிர­த­ம­ரின் உருவ பொம்­மையை எரித்து தங்­கள் எதிர்ப்­பைத் தெரி­வித்­துக்­கொண்­ட­னர். இத­னை­யடுத்து அரசு, அந்­தத் தேர்வை ரத்து செய்து மாண­வர்­க­ளின் குறை தீர்க்க ஒரு குழு­வும் அமைத்­துள்­ளது.

இந்­நி­லை­யில், மாண­வர்­கள் சட்­டத்தை மீறி வன்­மு­றை­யில் ஈடு­ப­டக் கூடாது என ரயில்வே அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இது­போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­தல் தவறு. அவ்­வா­றான நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மீது கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­றும் அவர்­க­ளுக்குத் தேர்வு எழுத வாழ்­நாள் தடை விதிக்­கப்­படும் என்­றும் ரயில்வே துறை அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.