பள்ளிகளைத் திறக்க நெருக்கடி

பள்ளிகளைத் திறக்க நெருக்கடி

2 mins read
f4dfe403-9967-416f-9712-42c47a9db7b6
-

பெற்றோர்் கோரிக்கை வலுக்கிறது; மத்திய அரசு ஆலோசனை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா மூன்­றா­வது அலை உச்­ச­ம­டை­யும் சூழ­லில், மூடி­யுள்ள பள்­ளி­களை மீண்­டும் திறக்க வேண்­டும் என்று பெற்­றோர்­கள் கோரிக்கை முன்­வைத்­துள்­ள­னர்.

தலை­ந­க­ரில் உள்ள பெற்­றோர் குழு, 1,600-க்கும் மேற்­பட்ட பெற்­றோர் கையெ­ழுத்­திட்ட மனு ஒன்றை, டெல்லி துணை முதல்­வர் மணீஷ் சிசோ­சி­டி­யா­வைச் சந்­தித்து அளித்­தது.

அத்­த­கைய கோரிக்­கை­கள் வேறு சில மாநி­லங்­க­ளி­லும் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன.

இருப்­பி­னும் பெற்­றோர்­களில் ஒரு பிரி­வி­னர், இணை­ய­வழி வகுப்­பு­கள் தொட­ர­வேண்­டும் என்று விரும்­பு­கின்­ற­னர். பள்­ளி­களை மூடி­வைப்­ப­தால் மாண­வர்­க­ளின் உடல் மற்­றும் மன­நி­லை­யில் ஏற்­படும் தாக்­கம் மிக­வும் மோச­மா­ன­தாகச் சிலர் கூறு­கின்­ற­னர்.

அது­பற்­றிக் கருத்­து­ரைத்த மத்­திய அர­சாங்­கம், பள்­ளி­களை மீண்­டும் திறக்க வேண்­டும் என்று பெற்­றோர்­கள் கோரி வரு­வ­தால், கொரோனா கால வழி­காட்டு நெறி­மு­றை­கள் அனைத்­தை­யும் பின்­பற்­றிப் பள்­ளி­களை திறப்­ப­தற்­கான மாதி­ரியை உரு­வாக்­கும் பணி­யில் ஈடு­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறி­யது.

மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்­சர் மண்­சுக் மாண்­ட­வியா, தேசிய நிபு­ணர் குழு­வி­டம் பள்­ளி­க­ளைப் பாது­காப்­பாக நடத்­து­வது தொடர்­பான வழி­காட்­டு­தல்­க­ளைத் தயா­ரித்­துக் கொடுக்­கு­மாறு அறி­வு­றுத்­தி­யுள்­ள­தாக தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. அந்த நெறி­மு­றை­கள் விரை­வில் வெளி­யா­கும் என்­றும் ஆனால் அவற்­றைப் பின்­பற்­று­வது மாநில அர­சு­க­ளின் முடி­வாக இருக்­கும் என்­றும் தெரி­கிறது.

இந்­தி­யா­வில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் 2022 ஜன­வரி வரை பள்­ளி­கள் பல மாதங்­கள் தொடர்ச்­சி­யாக மூடி­யுள்­ளன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

இணை­ய­வழி வகுப்­பு­களும், அவ்­வப்­போது நேரடி வகுப்­பு­களும் நடை­பெற்­றா­லும் ஒரு கல்வி ஆண்­டா­கப் பள்­ளி­கள் முழு­மை­யா­கச் செயல்­படா­தது மாண­வர் சமு­தா­யத்­துக்­குப் பேரி­ழப்பு எனக் கல்­வி­யா­ளர்­கள் வருத்­தம் தெரி­வித்­துள்­ள­னர்.

தற்­போது நாடு முழு­வ­தும் 15 வயது முத­லான குழந்­தை­க­ளுக்­குக் கொரோனா தடுப்­பூசி செலுத்­தப்­ப­டு­கிறது. இனி­மே­லும் பெற்­றோர் அச்­சப்­ப­டா­மல் குழந்­தை­களை பள்­ளிக்கு அனுப்ப முன்­வர வேண்­டும் என்­றும் கருத்­துத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.