புதுடெல்லி: ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழாவின் உச்சக்கட்டமாக ஜனவரி 28ம் தேதி தேசிய மாணவர் படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி டெல்லியில் உள்ள கரியப்பா திடலில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற படைப் பிரிவினர் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர் மற்றும் பீரங்கி அணிவகுப்பு, வான்குடை சாகசங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பிரதமர் நரேந்திர மோடி அவற்றைப் பார்வையிட்டு, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். பின்னர், சிறப்பாகச் செயல்பட்ட மாணவர்களுக்குப் பதக்கங்கள் வழங்கிப் பாராட்டினார்.

