கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்து தென்மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை

புது­டெல்லி: இந்­தி­யா­வில் ஒமிக்­ரான் பர­வல் கார­ண­மாக கொரோனா 3-வது அலை வேகம் பெற்­றுள்­ளது. கடந்த சில தினங்­க­ளாக கொரோனா பாதிப்பு லட்­சங்­களில் பதி­வாகி வரு­கிறது. வியா­ழக்­கிழமை மட்­டும் தின­சரி பதிப்பு 2.55 லட்­ச­மாக இருந்­தது.

இந்­நி­லை­யில் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த மத்­தி­யச் சுகா­தா­ரத்­து­றைச் செய­லர் ராஜேஷ் பூஷன், தமி­ழ­கம் உள்­ளிட்ட மாநி­லங்­களில் கொரோனா பாதிப்பு அதி­க­ரிப்­ப­தா­கக் கவலை தெரி­வித்­தார்.

கர்­நா­டகா, கேரளா, தமிழ்­நாடு, குஜ­ராத் உள்­ளிட்ட மாநி­லங்­களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதி­க­ரித்து வரும்­நி­லை­யில், மகா­ராஷ்­டிரா, உத்­த­ரப்­பி­ர­தே­சம், அரி­யானா உள்­ளிட்ட மாநி­லங்­களில் தொற்று குறைந்து வரு­வ­தாக அவர் கூறி­னார்.

தமி­ழ­கம் உள்­ளிட்ட தென் மாநி­லங்­க­ளின் சுகா­தா­ரத்­துறை அமைச்­சர்­க­ளு­டன் மத்­தி­யச் சுகா­தா­ரத்­துறை அமைச்­சர் மன்­சுக் மாண்­ட­வியா ஆலோ­சனை நடத்­த­வி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இணை­யம் வழி, அந்த ஆலோ­ச­னைக் கூட்­டம் நடை­பெ­றும் என்­றார் அவர். தென் மாநி­லங்­களில் கொரோனா நில­வ­ரம், பொதுச் சுகா­தா­ரத்­து­றை­யின் தயார்­நிலை மற்­றும் தடுப்பு நட­வ­டிக்­கை­கள் குறித்து அந்­தக் கூட்­டத்­தில் ஆலோ­சிக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆந்­திரா, கர்­நா­டகா, கேரளா, தெலுங்­கானா, லட்­சத்­தீவு, புதுச்­சேரி மற்­றும் அந்­த­மான் நிக்­கோ­பார் தீவு­க­ளின் சுகா­தார அமைச்­சர்­கள் கூட்­டத்­தில் கலந்து கொள்­வார்­கள் என்று அதி­கா­ர­பூர்­வத் தக­வல்­கள் தெரி­வித்­தன.

இந்­தி­யா­வில் நேற்­றுப் புதி­தாக 248,697 பேருக்­குக் கொரோனா பாதிப்பு உறு­தி­செய்­யப்­பட்­டது. மேலும் 627 தொற்று மரணங்கள் பதிவாயின. அவர்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 492,356 பேர் கொரோனா கார­ண­மாக பலி­யாகி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!