'பெகாசஸ்' மென்பொருளை இந்தியா வாங்கியதாக தகவல்

'பெகாசஸ்' மென்பொருளை இந்தியா வாங்கியதாக தகவல்

1 mins read
eabe4e01-7d62-4f43-be5d-9736cd2bfa8a
-

புது­டெல்லி: தொலை­பே­சி­களை ஒட்­டுக்­கேட்க பயன்­ப­டுத்­தப்­படும் 'பெகா­சஸ்' உளவு மென்­பொ­ருளை இந்­திய அரசு வாங்­கி­ய­தாக வெளி­யான செய்தி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. நியூ­யார்க் டைம்ஸ் ஊட­கம் வெளி­யிட்­டுள்ள புல­னாய்­வுக் கட்­டுரை ஒன்­றில் இத்­த­க­வல் இடம்­பெற்­றுள்ளது.

இந்த விவ­கா­ரம் அர­சி­யல் வட்­டா­ரங்­களில் புது புய­லைக் கிளப்­பும் என எதிர்­பார்ப்­ப­தாக அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.

கடந்த 2017ஆம் ஆண்டு இஸ்‌ரேலுடனான இரண்டு பில்­லி­யன் டாலர் மதிப்­பி­லான ஆயுத ஒப்பந்­தத்­தின் ஒரு பகுதி­யாக, 'பெகா­சஸ்' மென்­பொருளை வாங்கியது இந்­தியா என நியூ­யார்க் டைம்ஸ் கூறி­யுள்­ளது.

உல­கம் முழு­வ­தும் உள்ள பல்­வேறு அர­சி­யல் பிர­மு­கர்­கள், செய்­தி­யா­ளர்­கள், சமூக ஆர்­வ­லர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரை­யும் உளவு பார்க்க 'பெகா­சஸ்' மென்­பொ­ருள் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அண்­மை­யில் தக­வல் வெளி­யா­னது.

இந்­தி­யா­வி­லும் இந்த ஒட்­டுக்­கேட்­புப் பட­லம் நிகழ்ந்­துள்­ள­தாக ஒரு தரப்­பி­னர் புகார் எழுப்­பி­னர்.

இதை­ய­டுத்து, இந்த விவ­கா­ரம் குறித்து விசா­ரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதி­மன்ற நீதி­பதி தலை­மை­யில் ஒரு குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது. எட்டு வாரங்­க­ளுக்­குள் விசா­ரணை நடத்தி அறிக்கை அளிக்க அக்­குழு­வுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் நியூ­யார்க் டைம்ஸ் வெளி­யிட்ட செய்தி புதிய பரபரப்புக்கு வித்­திட்­டுள்­ளது.