மும்பை: மகாராஷ்டிராவில் பெண் காவலர்களுக்குச் சிறந்த வேலை, வாழ்க்கையை வழங்கும் கொள்கையின் அடிப்படையில் அவர்களின் பணி நேரம் தினமும் 12 மணி நேரம் என்பதில் இருந்து 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர காவல்துறை தலைவர் டிஜிபி சஞ்சய் பாண்டே தமது உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மூத்த அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் தற்போது மாநில பெண் காவலர்களின் பணி நேரம் தினமும் 12 மணி நேரமாக உள்ளது.
சில சமயங்களில் அதையும் கடந்து பணி நேரம் நீட்டிக்கப்படுவதாகவும் இதனால் குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் காவல்துறை தலைவரிடம் கடிதம் வழி முறையிட்டனர்.
இதையடுத்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசித்து பணி நேரத்தைக் குறைக்க உத்தரவிட்டுள்ளார் டிஜிபி சஞ்சய் பாண்டே.

