ஏர் இந்தியாவின் புது அறிவிப்பு

ஏர் இந்தியாவின் புது அறிவிப்பு

1 mins read
9b6f0705-5b30-46b8-a7ce-218f3a502852
-

புது­டெல்லி: வெள்­ளிக்­கி­ழமை அன்று ஏர் இந்­தியா விமான நிறு­வ­ன­மா­னது டாடா குழு­மத்­தி­டம் ஒப்­படைக்­கப்­பட்­டி­ருப்­பது விமான உள் அறி­விப்­பின் மூலம் பய­ணிகளுக்குத் தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 69 ஆண்­டுகளுக்குப் பிறகு, டாடா நிறு­வ­னத்­தி­டம் ஏர் இந்­தியா வியா­ழக்­கி­ழமை ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. இதை விமா­னப் பய­ணி­களுக்­குத் தெரி­யப்­ப­டுத்­தும் வித­மாக ஏர் இந்­தியா விமா­னங்­களில் அறி­விப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது.

"இந்த வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க விமான பய­ணத்­தில் உங்­களை வர­வேற்­கி­றோம். இது ஒரு சிறப்பு நிகழ்­வைக் குறிக்­கிறது. ஏர் இந்­தியா எழு­பது ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இன்று அதி­கா­ர­பூர்­வ­மாக டாடா குழு­மத்­தின் ஓர் அங்­க­மா­கிறது.

"ஒவ்வோர் ஏர் இந்­தியா விமா­னத்­தி­லும் புதிய அர்ப்­ப­ணிப்­பு­டனும் ஆர்­வத்­து­ட­னும் உங்­க­ளுக்கு சேவை செய்ய நாங்­கள் காத்­தி­ருக்­கி­றோம். இந்­தப் பய­ணத்­தில் நீங்­கள் மகிழ்ச்சி­யு­டன் இருப்­பீர்­கள் என்று நம்­புகிறோம், நன்றி," என விமானி­கள் அறி­விப்­பில் குறிப்­பிட்­ட­னர்.