வூஹான் திரும்ப இந்திய மாணவி விருப்பம்

வூஹான் திரும்ப இந்திய மாணவி விருப்பம்

1 mins read
9535e8e5-9b16-4790-bfe5-983531d088a6
படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் 2020 ஜனவரி 30ஆம் தேதி, சீனாவின் வூஹான் நகரிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் குணமடைந்தார்.

தற்போது, தமது மருத்துவப் படிப்பு பாதியில் நிற்பதால் மீண்டும் வூஹான் நகருக்குச் செல்ல அந்த மாணவி விருப்பம் தெரிவித்து வருகிறார்.

இது குறித்து அந்த மாணவியின் தந்தை கூறுகையில், "கொரோனா தொற்று தற்போது சமாளிக்கக் கூடியதாக இருக்கிறது. எனது மகளின் மருத்துவத் தொழில் மட்டும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது," என்றார்.