மோடியைக் கவர்ந்த திருப்பூர் கொடையுள்ளம்

மோடியைக் கவர்ந்த திருப்பூர் கொடையுள்ளம்

1 mins read
bdda42a6-2ac6-423c-8633-32e7334916d9
சின்னவீரம்பட்டி பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியைச் செப்பனிட, இளநீர் விற்ற பணம் ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கிய தாயம்மாள். படம்: இந்திய ஊடகம் -

புது­டெல்லி: பிர­த­மர் மோடி மாதந்­தோ­றும் கடைசி ஞாயிற்­றுக்­கி­ழமை வானொ­லி­யில் 'மன­தின் குரல்' (மன் கி பாத்) என்ற தலைப்­பில் நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்றி வரு­கி­றார்.

அதன்­படி நேற்று தமது 85வது மன் கி பாத் உரை­யை ஆற்றினார். இது இந்த ஆண்­டின் முதல் மன­தின் குரல் நிகழ்ச்­சி­யா­கும்.

இந்­நி­கழ்ச்­சி­யில் பேசிய பிர­த­மர் மோடி, "தமிழ்­நாட்­டில் திருப்­பூர் மாவட்­டம் உடு­ம­லைப்­பேட்­டை­யில் வசிக்­கும் தாயம்­மாள் என்ற பெண்­னின் செயல் நம் அனை­வ­ருக்­கும் முன்­மா­தி­ரி­யாக அமைந்­துள்­ளது.

"அவ­ருக்­குச் சொந்­த­மாக எந்த நில­மும் இல்லை. பல ஆண்­டு­

க­ளாக, இள­நீர் விற்றே அவ­ரது குடும்­பம் வாழ்ந்து வரு­கிறது.

"அவ­ரது குழந்­தை­கள் சின்­ன­வீ­ரம்­பட்டி பஞ்­சா­யத்து யூனி­யன் நடு­நி­லைப்­பள்­ளி­யில் படித்து வரு­கின்­ற­னர். அந்­தப் பள்­ளி­யின் உள்­கட்­ட­மைப்பை மேற்­கொள்ள இள­நீர் விற்­ற­தன் மூலம் கிடைத்த ரூ.1 லட்­சத்தை பள்­ளிக்கு நன்­கொ­டை­யாக தாயம்­மாள் அளித்­தார். இத­னைச் செய்­வ­தற்கு மிகப்­பெ­ரிய மன­தும் சேவை செய்­யும் எண்­ண­மும் தேவை," என்று தாயம்­மா­ளைப் புகழ்ந்­தார்.