தென்மாநிலங்களில் கேரளா மட்டும் தவிக்கிறது

தென்மாநிலங்களில் கேரளா மட்டும் தவிக்கிறது

1 mins read
41f8a25c-26a5-42b2-878f-cc259744e89a
-

ஹைதராபாத்: கொரோனா தொற்று குறைந்து வருவதால் தென் மாநிலங்கள் நாளை முதல் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகின்றன. ஏற்கெனவே தமிழ்நாட்டில் கட்டுப்பாடு தளர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி இரவுநேர மற்றும் ஞாயிறு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டு பிப்ரவரி 1 (நாளை) முதல் பள்ளி, கல்லூரி கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களி லும் நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகின் றன. ஆனாலும் கேரளா மட்டும் இன்னும் கொரோனா வின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது. அங்கு ஒரே நாளில் 50,000 பேருக்கு தொற்று உறுதியானதால் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் நேற்றும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.