பிப்ரவரிக்கான சில விமானச் சேவைகளை ரத்து செய்த விஸ்தாரா

பிப்ரவரிக்கான சில விமானச் சேவைகளை ரத்து செய்த விஸ்தாரா

1 mins read
13d2297f-32ef-41b7-9263-9fb30c73b3b3
படம்: இணையம் -

பிப்ரவரி மாதத்துக்கான சில விமானச் சேவைகளை விஸ்தாரா நிறுவனம் ரத்து செய்துள்ளது.

விமானப் பயணங்களுக்கான தேவை குறைந்ததன் காரணமாக மேலும் பல விமானச் சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகவும் விமானப் போக்குவரத்துத் துறை மூலங்கள் கூறியுள்ளன.

விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளிடையே புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மார்ச் 31ஆம் தேதிவரை பயணம் செய்வதற்கான விமான முன்பதிவுகளை ஒருமுறை மாற்றி அமைப்பதற்கான கட்டணத்தை விஸ்தாரா தள்ளுபடி செய்வதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் திங்கட்கிழமை (ஜனவரி 31) கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு உதவ தான் தயாராக இருப்பதாகவும் விஸ்தாரா சொன்னது.

விமானப் பயணங்களுக்கான தேவை குறைந்துள்ளதால், இண்டிகோ நிறுவனமும் அதன் விமானச் சேவைகளில் 20 விழுக்காடு ரத்து செய்யப்படுவதாக அண்மையில் அறிவித்திருந்தது.

குறிப்புச் சொற்கள்