'கற்க கசடற' குறளை குறிப்பிட்டு அதிபர் உரை

'கற்க கசடற' குறளை குறிப்பிட்டு அதிபர் உரை

2 mins read
a0be4b82-1fcf-4283-90b6-fd98b0adba4c
நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு வந்த பிரதமர் மோடி, அதிபர் ராம் நாத் கோவிந்த். முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் மோடி, பட்ஜெட் கூட்டத் தொடரில் விரிவான, ஆரோக்கியமான விவாதங்களில் ஈடுபட்டு நாட்டை விரைவான வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்ல ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் 'பெகாசஸ்' தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரத்தைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது

புது­டெல்லி: இந்­திய அதி­பர் ராம்­நாத் கோவிந்த், 'கற்க கச­டற' குறளை மேற்­கோள்­காட்டி நாடா­ளு ­மன்­றத்­தில் உரை­யாற்­றி­யி­ருக்­கி­றார்.

நாடா­ளு­மன்ற பட்­ஜெட் கூட்­டத்­தொ­டர் அதி­பர் உரை­யு­டன் தொடங்­கி­யது.

புதிய கல்­விக் கொள்கை தொடர்­பாக பேசிய அதி­பர் ராம் நாத் கோவிந்த், 'கற்க கச­டற கற்­பவை கற்­ற­பின் நிற்க அதற்­குத் தக' என்ற திருக்­கு­றளை மேற்­கோள் காட்­டி­யிருந்தார்.

"திருவள்ளுவரின் கற்க கசடற எனும் குறளுக்கு இணங்க புதிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது. தேசிய கல்விக் கொள்கை யின் ஒரு பகுதியாக உள்ளூர் மொழிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. முக்கியமான நுழைவுத் தேர்வுகளை இந்திய மொழிகளில் நடத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படு கிறது," என்று அதிபர் குறிப்பிட்டார்.

"இந்­தியா தனது 75வது சுதந்­திர தின ஆண்டை கொண்­டாடி வரு­கிறது. நாட்­டின் வளர்ச்­சிக்­காக பாடு­பட்ட அனை­வ­ருக்­கும் எனது நன்­றியைத் தெரி­விக்­கி­றேன். நாட்டிற்­காக உயிர்த் தியா­கம் செய்த அத்தனை போர் வீரர்­க­ளுக்­கும் வணக்­கங்­கள். வ.உ.சிதம்­ப­ர­னா­ரின் 150வது பிறந்­த­நாள் கொண்­டா­டப் ­ப­டு­வதையும் நினை­வு­கூர்­கி­றேன்.

"கொரோ­னாவைக் கட்­டுப்­படுத்த மத்­திய, மாநில அர­சு­கள் சிறப்­பாக செயல்­பட்­டுள்ளன. கொரோனா தடுப்­பூசி செலுத்­து­வ­தில் உல­கின் முன்­னோடி நாடாக இந்­தியா திகழ்­கிறது. கொரோனா தடுப்­பூசி நம் நாட்­டி­லேயே தயா­ரிக்­கப்­பட்­ட­தால் நிறைய உயிர்­கள் காப்­பாற்­றப்­பட்­டன. மத்­திய அரசு அடுத்த 25 ஆண்­டு­க­ளுக்­கான வளர்ச்­சியை வழங்­கும் திட்­டங்­களை செயல் ­படுத்தி வரு­கிறது. ஆயுஷ்­மான் பாரத் திட்­டத்­தின் மூலம் ஏழை மக்­கள் சுகா­தார திட்­டங்­களைப் பெறு­வ­தற்கு உத­வி­யாக இருந்­தது.

"நேரடி மானி­யம் மூலம் ஏழை­கள் பணம் பெறு­வதை மத்­திய அரசு உறுதி செய்­தி­ருக்­கிறது. கிரா­மங்­க­ளுக்கு குழாய் மூலம் குடி­நீர் வழங்­கும் திட்­டம் ஏரா­ள­மான பெண்­க­ளுக்கு வரப்­பி­ர­சா­த­மாக இருக்­கிறது. சமு­தா­யத்­தில் சமநிலை இருக்­க­வேண்­டும் என்ற அம்­பேத்­க­ரின் எண்­ணத்தை செயல்­ப­டுத்­து­வ­தில் அரசு தீவி­ரம்­காட்டி வரு­கிறது.

"கடந்த ஓர் ஆண்­டில் நாட்­டின் மொத்த வேளாண் உற்­பத்­திப் பொருள்­கள் 33% உயர்ந்­துள்­ளது. இந்­தி­யா­வின் பாரம்­ப­ரி­ய­மான மழை­நீர் சேக­ரிப்பு முறை­களைப் பாது­காப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. பெண் குழந்­தை­களைப் பாது­காப்­போம்; பெண் குழந்­தை­களைப் படிக்க வைப்­போம்' எனும் திட்­டம் பெண்­கள் முன்­னேற வழி­வகை செய்­துள்­ளது. இஸ்­லா­மியப் பெண்­கள் பெரும் சவால்­களைச் சந்­தித்­து­வந்த முத்­த­லாக் சட்­டம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ளது,'' என்று அதி­பர் ராம் நாத் கோவிந்த் மேலும் தெரிவித்தார்.