புதுடெல்லி: காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் அம்மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி, அவரது சொந்த தொகுதியான சாம்கவுர் சாகிப் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப் பட்டு இருந்தது.
இந்த நிலையில் எட்டு வேட்பாளர்கள் அடங்கிய 3வது பட்டியலை காங்கிரஸ் அண்மையில் வெளியிட்டது.
அதில், சரண்ஜித்சிங் சன்னி, பதவுர் என்ற மற்றொரு தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்தார். இதனால் அவர் 2 தொகுதிகளில் போட்டியிடு வார் எனத் தெரிகிறது.
ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சி களமிறங்கியுள்ளது. காங்கிர சில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கிய முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கிறார். காங்கிரசுக்கு இந்தக் கூட்டணி கடும் சவாலை அளிக்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிடும் எட்டு பேர் கொண்ட 3வது வேட் பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.

