கர்நாடகாவில் ஊரடங்கு ரத்து; கேரளாவில் ஞாயிறு முடக்கம்

கர்நாடகாவில் ஊரடங்கு ரத்து; கேரளாவில் ஞாயிறு முடக்கம்

2 mins read
a6503874-d5ac-4503-af6c-86c482d2c9e8
-

பெங்­க­ளூரு: இந்­தி­யா­வில் கிரு­மிப் பர­வல் கார­ண­மாக கேர­ளா­வி­லும் மகா­ராஷ்­டி­ரா­விலும் இரு­வி­த­மான கட்­டுப்­பா­டு­கள் அமல்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. கர்­நா­டகா மாநி­லத்­தில் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரு­வதால் ஜன­வரி 7ஆம் தேதி முதல் இர­வு­நேர ஊர­டங்கு அமல் ­ப­டுத்­தப்­பட்­டது.

இதையடுத்து கர்­நா­ட­கா­வில் கொரோனா 3வது அலை குறை­யத் தொடங்­கி­யுள்­ளது. மேலும் இந்த அலை­யில் கொரோனா பர­வல் அதி­க­மாக இருந்­தா­லும் உயி­ரி­ழப்பு மற்­றும் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை குறைந்து உள்­ளது.

இதற்­கி­டையே தொற்று பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான முதல்­வர் பச­வ­ராஜ் தலை­மை­யில் நடந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் இரவு நேர ஊர­டங்கு ரத்து செய்ய முடிவு செய்­யப்­பட்­டது.

அதன்­படி நேற்று முதல் இரவு நேர ஊர­டங்கு முடி­வுக்கு வந்­துள்­ளது. மேலும் பெங்­க­ளூரு நக­ரில் ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரை பள்­ளி­கள் திறக்­கப்­ப­டு­கின்­றன.

திரு­மண நிகழ்­வில் அதி­க­மாக 300 பேர் வரை மட்­டுமே பங்­கேற்க லாம் எனக் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. திரை­ய­ரங்­கு­களில் 50 விழுக்­காடு இருக்­கை­களைப் பயன் ­ப­டுத்தலாம் என்ற உத்தரவும் நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

அதே சம­யத்­தில் அண்டை மாநிலமா கேர­ளா­வில் கட்­டுப்­பா­டு­க­ளு­டன் கூடிய ஞாயிறு முழு முடக்­கம் அம­லில் இருந்து வரு­கிறது.

இத­னால் தமிழ்­நாட்­டி­லி­ருந்து கன்­னி­யா­கு­மரி வழி­யா­கச் செல்­லும் வாக­னங்­கள் களி­யக்­கா­வி­ளை­யில் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

கேர­ளா­வில் அதி­க­ரித்­து­வ­ரும் கொரோனா பர­வலைக் கட்­டுப்­ப­டுத்த 2வது வார­மாக ஞாயிறு கட்­டுப்­பா­டு­க­ளு­டன் கூடிய முழு ஊர­டங்கு கடைப்­பி­டிக்­கப்­பட்டு வரு­கிறது. அத்­தி­யா­வ­சி­யத் தேவை­க­ளான மருந்து, காய்­க­றிக் கடை­கள் மற்­றும் பால் விற்­பனை மையங்­கள் மட்­டுமே திறக்­கப்­பட்­டுள்­ளன.

மருத்­து­வம், விமான நிலை­யம் உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சி­யத் தேவை ­க­ளுக்­கான வாக­னங்­கள் மட்­டுமே இயக்­கப்­ப­டு­கின்­றன