விவசாயிகள் 'துரோக தினம்' அனுசரிப்பு

விவசாயிகள் 'துரோக தினம்' அனுசரிப்பு

1 mins read
6615d897-74d8-40a0-a0d5-a687ce6967c8
-

நொய்டா: மத்­திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்த சட்­டங்­க­ளை­யும் கடந்த ஆண்டு திரும்பப் பெற்­றது.

அது மட்­டு­மல்­லா­மல் குறைந்­த­பட்ச ஆத­ரவு விலைக்கு சட்­ட­பூர்வ உத்­த­ர­வா­தம் உட்­பட விவ சாயி­க­ளின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக அரசு உறு­தி­ய­ளித்­தது.

இதை­ய­டுத்து விவ­சா­யி­கள் டெல்­லி­யில் ஓராண்­டுக்கு மேலாக நடத்தி வந்த போராட்­டத்தை கடந்த டிசம்­பர் 9ஆம் தேதி மீட்­டுக் கொண்­ட­னர்.

ஆனால் இந்த வாக்­கு­று­தி­களை இது­வரை மத்­திய அரசு நிறை­வேற்­ற­வில்லை என விவசாயி­கள் குற்­றம் சாட்டி வரு­கின்­ற­னர்.

எனவே மத்­திய அரசைக் கண்­டித்து நேற்று நாடு முழு­வ­தும் அவர்­கள் துரோக தினம் அனு­ச­ரிக்க முடிவு செய்­துள்­ள­னர்.

இது குறித்து தனது டுவிட்­டர் பதி­வில் விளக்­கிய பார­திய கிசான் யூனி­யன் சங்க தலை­வர்­களில் ஒரு­வ­ரான ராகேஷ் திகா­யத், "விவ­சா­யி­க­ளின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­தாக உறு­தி­ய­ளித்து மத்­திய அரசு அளித்த கடி­தத்­தின் அடிப்­ப­டை­யில் கடந்த டிசம்­பர் 9ஆம் தேதி எங்­கள் போராட்­டத்தை மீட்­டுக் கொண்­டோம்.

"ஆனால் மத்­திய அரசு தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றவில்லை.

"எனவே மத்­திய அரசை கண்­டித்து நாடு முழு­வ­தும் துரோக தினம் அனு­ச­ரிக்­கப்­படும்," என்று அறி­வித்­தி­ருந்­தார்.

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் நேற்று துரோக தினமாக அனுசரித்தனர்.