'முத்தலாக்' ரத்துக்கு மவுலானா தவ்கீர் மருமகள் பாராட்டு

'முத்தலாக்' ரத்துக்கு மவுலானா தவ்கீர் மருமகள் பாராட்டு

1 mins read
d3a91c1b-40dc-429f-a0bb-176d1d88bff0
நிடா கான். கோப்புப் படம்: இந்திய ஊடகம் -

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தின் பிர­பல முஸ்­லிம் தலை­வ­ரான மவு­லானா தவ்­கீர் ரசா கானின் மரு­ ம­கள் பாஜ­க­வில் இணைந்­துள்ள நிலை­யில் முத்­த­லாக் ரத்து செய்யப்­ பட்­ட­தற்­கு நன்றியும் தெரி­வித்­துள்­ளார்.

உத்­த­ர­ப்பி­ர­தேச மாநி­லத்­தில் இத்­தே­ஹத்-இ-மில்­லத் கவுன்­சில் என்ற கட்­சியை நடத்தி வரும் மவு­லானா தவ்­கீர் ரசா கான், காங்­கி­ர­சுக்கு ஆத­ர­வாக பிரசாரம் செய்து வருகிறார்.

இவ­ரது மரு­ம­கள் நிடா கான் நேற்று முன்­தி­னம் பாஜக தலை­வர்­கள் முன்­னி­லை­யில் அக்­கட்­சி­யில் சேர்ந்­தார் என்று இந்­திய ஊட­க­மான 'இந்து தமிழ்' தெரி­வித்­தது.

பின்­னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய நிடா கான், "மும்­முறை தலாக் (முத்­த­லாக்) சொல்­லும் முறையை ரத்து செய்து முஸ்­லிம் பெண்­கள் மத்­தி­யில் நம்­பிக்­கையை விதைத்­த­வர் பிர­த­மர் மோடி என்றார்.

"அவரது சிறப்­பான ஆட்­சி­யால் நாடு வளர்ச்­சிப் பாதை­யில் செல்­கிறது. அவ­ர­து ­ஆட்சி மீது நம்­பிக்கை வைத்து நாங்­கள் பாஜ­க­வில் சேர்ந்­துள்­ளோம். எனவே முஸ்­லிம் பெண்­கள் பாஜ­க­வுக்கு வாக்­க­ளிப்­பார்­கள் என நம்­பு­கி­றோம். இம்­மு­றை­யும் உபி­யில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

"என்­னு­டைய மாம­னார், பெண்­கள் உரிமை குறித்து வெளியே மட்­டுமே பேசி வரு­கி­றார். காங்­ கி­ரஸ் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் பிரி­யங்கா காந்­தியை தனது சகோ­த­ரி­யாக நினைத்து அவர் காங்­கி­ர­சுக்கு பிர­சா­ரம் செய்து வரு­கி­றார்.

"ஆனால் தன்­னு­டைய வீட்­டில் உள்ள பெண்­கள் உரிமை குறித்து அவர் சிந்­தித்­ததே இல்லை." என்றும் நிடா கான் கூறியுள்ளார்.