'பாஜக ஆட்சி அமைத்தால் உ.பி. முதன்மை மாநிலமாகும்'

'பாஜக ஆட்சி அமைத்தால் உ.பி. முதன்மை மாநிலமாகும்'

1 mins read
ab6d3273-0418-4008-abfa-848d71ea9a26
-

லக்னோ: உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் நடை­பெ­றும் தேர்­த­லில் பார­திய ஜனதா கட்சி மீண்­டும் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­னால் நாட்­டி­லேயே முதன்­மை­யான மாநி­ல­மாக மாற்­றப்­படும் என்று உள்­துறை அமைச்­சர் அமித்ஷா தேர்­தல் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.

உத்­த­ரப்­பி­ர­தேச சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லை­யொட்டி, முசா­ஃபர் நக­ரில் அவர் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டார்.

அம்­மா­நி­லத்­தில் அகி­லேஷ் யாத­வின் சமாஜ்­வாதி கட்சி ஆட்சி நடத்தியபோது குற்­றங்­கள் அதிக அள­வில் நடந்­த­தா­க­வும் கடந்த ஐந்து ஆண்­டு­கால பாஜக ஆட்­சி­யில் குற்­றங்­கள் குறைந்­தி­ருப்­ப­தா­க­வும் அமித் ஷா கூறி­னார்.

சமாஜ்­வாதி கட்­சி­யின் ஆட்­சிக் காலத்­தில் சட்­டம் ஒழுங்கு நிலை குறித்த புள்­ளி­வி­வ­ரங்­களை அகி­லேஷ் யாதவ் சமர்ப்­பிக்க தயா­ராக இருக்­கி­றாரா என்றும் அமித் ஷா கேள்வி எழுப்­பி­னார்.

இதே­போல, காங்­கி­ரஸ் மற்­றும் பகு­ஜன் சமாஜ் கட்­சி­க­ளை­யும் அமித் ஷா கடு­மை­யா­கச் சாடி­னார்.

உத்­த­ர­ப்பி­ர­தே­சத்­தில் இம்­மா­தம் 10ஆம் தேதி முதல் சட்­ட­சபை தேர்­தல் நடை­பெ­று­கிறது.

இதற்­காக ஆளும் பார­திய ஜனதா கட்­சி­யும் அகி­லேஷ் யாதவ் தலை­மை­யி­லான சமாஜ்­வாதி கட்­சி­யும் காங்­கி­ரஸ் கட்­சி­யும் தீவிர வாக்­குச் சேக­ரிப்­பில் ஈடு­பட்டு வருகின்றன.