ஹிஜாப், காவித்துண்டு விவகாரம்: கர்நாடக பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை

ஹிஜாப், காவித்துண்டு விவகாரம்: கர்நாடக பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாள்கள் விடுமுறை

2 mins read
91a1ebc6-6b5b-42fd-a819-0450db33615c
-

பெங்­களூரு: ஹிஜாப், காவித் துண்டு விவ­கா­ரம் கார­ண­மாக கர்­நா­ட­கா­வில் பதற்­றம் ஏற்­பட்­டுள்ள நிலை­யில், அங்கு பள்ளி, கல்­லூரி களுக்கு மூன்று நாள்­கள் விடு­முறை விடப்­பட்­டுள்­ளது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக பெங்­க­ளூரு உயர் நீதி­மன்­றம் பிறப்­பிக்­கும் உத்­த­ரவை கர்­நா­டகா அரசு அப்­ப­டியே ஏற்­றுச் செயல்­படும் என முதல்­வர் பச­வ­ராஜ் பொம்மை தெரி­வித்­துள்­ளார்.

"பள்ளி, கல்­லூரி மாண­வர்­கள் சீருடை அணிய வேண்­டும் என்று அரசு தெளி­வாக உத்­த­ர­விட்­டுள்­ளது. கர்­நா­டக கல்­விச் சட்­டத்­தின் அடிப்­ப­டை­யில்­தான் இந்த உத்­த­ரவை அரசு பிறப்­பித்­துள்­ளது," என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில், நேற்று இந்த விவ­கா­ரம் தொடர்­பான மனுக்­களை விசா­ரித்த உயர் நீதி­மன்ற நீதி­பதி கிருஷ்ணா தீக்­‌ஷித், அதிக எண்­ணிக்­கை­யி­லான நீதி­ப­தி­கள் கொண்ட அமர்­வுக்கு இந்த வழக்கை மாற்­று­வ­தாக அறி­வித்­தார்.

மேலும், பள்­ளி­க­ளுக்கு அருகே ஆர்ப்­பாட்­டங்­கள் நடத்­த­வும் நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

இதற்­கி­டையே, கட­லோர மாவட்­ட­மான உடுப்­பி­யில் உள்ள சில கல்­லூ­ரி­களில் மாண­வர்­கள் போராட்­டம் நடத்­தி­னர்.

வட­கர்­நா­டக மாவட்­ட­மான பாகல்­கோட்­டை­யில் உள்ள பெரப்­ப­ர­ன­பட்டி பகுதி அரசு கல்­லூ­ரி­யில் நடந்த போராட்­டத்­தின் போது கல்­வீச்­சும் நடந்­தது. இதில் ஒரு மாண­வர் காயம் அடைந்­தார்.

மலை­நாடு மாவட்­ட­மான சிவ­மொக்­கா­வில் நடந்த போராட்­டத்­தி­லும் கல்­வீச்­சில் ஒரு மாண­வ­ரின் மண்டை உடைந்­தது.

ஹிஜாம் அணிந்த மாண­வி­கள் பள்­ளிக்­குள் நுணை­வ­தைத் தடை செய்­வது அடிப்­படை உரி­மை­களை மீறு­வ­தற்கு ஈடா­னது என்று கர்­நா­டக முன்­னாள் முதல்­வர் சித்­த­ரா­மையா கூறி­யுள்­ளார். இந்த விவ­கா­ரம் கார­ண­மாக பெங்­க­ளூரு உட்­பட மாநி­லம் முழு­வ­தும் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.