இடாநகர்: பனிச்சரிவில் சிக்கி ஏழு ராணுவ வீரர்கள் பலியான சோகச் சம்பவம் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி அங்கு காமெங் எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திடீரென அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏழு வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.
இரண்டு நாள்களுக்குப் பிறகே அவர்களுடைய உடல்களை மீட்க முடிந்ததாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

