இன்ஜின் மூடி விழுந்ததை கவனிக்காத விமானி: பயணிகள் கடும் அதிர்ச்சி

இன்ஜின் மூடி விழுந்ததை கவனிக்காத விமானி: பயணிகள் கடும் அதிர்ச்சி

1 mins read
d8f47473-777b-483c-8842-0b6abdda677d
இன்ஜின் மூடி இல்லாத விமானம். படம்: ஊடகம் -

மும்பை: விமா­னத்­தின் இன்­ஜின் பகு­தி­யின் மூடி­யா­கச் செயல்­படும் பாகம் கீழே விழுந்­ததை அறி­யாத விமா­னி­கள், அந்த விமா­னத்தை மும்­பை­யில் இருந்து குஜ­ராத் மாநிலம் வரை இயக்கி உள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் காலை 6.30 மணி­ய­ள­வில் தனி­யார் நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான அந்த 'ஏடி­ஆர்' ரக விமா­னம் மும்­பை­யில் இருந்து 70 பய­ணி­க­ளு­டன் குஜராத்­தில் உள்ள புஹூஜ் நக­ருக்­குப் புறப்பட்டுச் சென்­றது.

முன்­ன­தாக, ஓடு­த­ளத்­தில் இருந்து அந்த விமா­னம் மேலெ­ழும்­பி­ய­போது, அதி­லி­ருந்து ஏதோ ஒரு பொருள் கீழே விழுந்­ததை விமான நிலை­யத்­தின் தரைக்­கட்டுப்பாட்டு அறை­யில் இருந்­த­வர்­கள் கவ­னித்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து விமா­னிக்கு உட­ன­டி­யாகத் தக­வல் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும், அனைத்து கரு­வி­களும் சரி­யா­கச் செயல்­படு­வ­தா­க­வும் எந்­த­வித கோளா­றும் இல்லை என்­றும் தலைமை விமானி தெரி­வித்­துள்­ளார்.

அதன் பின்­னர் அந்த விமா­னம் குறித்த நேரத்­தில் புஹூஜ் விமான நிலை­யத்­தைச் சென்­ற­டைந்­தது. உட­ன­டி­யாக விமா­னத்தை ஆய்வு செய்­த­னர். அப்­போது விமான இன்­ஜினை மூடி­யி­ருக்­கும் பகு­தி­தான் கீழே விழுந்­துள்­ளது என்­பது உறு­தி­யா­னது.

இதை­ய­டுத்து இந்த விவ­கா­ரம் தொடர்­பாக விசா­ரணை நடத்­த விமா­னப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

இத்தகவலைக் கேள்விப்பட்ட அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் மட்டுமல்லாமல் மற்ற பயணிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.